26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
maxresdefault 2
ஆரோக்கிய உணவு

சூப்பரான கேரட் கீர்

தேவையான பொருட்கள்

கேரட் – 3

பாதாம் பவுடர் – 1 1/2 மேசைக்கரண்டி

பால் – அரை கப்

பாதாம் பருப்பு – 10

சர்க்கரை – கால் கப் + 2 மேசைக்கரண்டி

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

இப்போது சூப்பரான கேரட் கீர் ரெடி.

Related posts

உம்களுக்கு தெரியுமா தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு சப்போட்டாப் பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? சர்க்கரைவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் ?

nathan

வேப்பம்பூ சாதம் செய்வது எப்படி?

nathan

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika

ருசியான பருப்பு போளி செய்ய…!

nathan

உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!

nathan