நிலை #1
ஒரு பக்கமாக தூங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமான பெண்களால் தூங்கும் பொதுவான தூக்க நிலையாகும். 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 41% பேர் இந்நிலையில் தூங்குவது தெரிய வந்தது. இந்த நிலையில் தூங்குபவர்கள் மென்மையானவர்கள், கனிவானவர்கள், மிகவும் சென்சிடிவ் மற்றும் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். இவர்கள் வெளியே கடுமையானவர்களாக தெரிந்தாலும், மனதளவில் மிகவும் சென்சிடிவ்வானவர்கள்.
நிலை #2
படத்தில் காட்டப்பட்டவாறு, பக்கவாட்டில் தூங்குவது கவலையின்மை மற்றும் நிதானமான குணத்தைக் குறிக்கிறது. இந்த மாதிரி தூங்குபவர்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகுவார்கள் மற்றும் ஒரு குழுவில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவார்கள். இருப்பினும், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். கணக்கெடுப்பில், 15% மக்கள் இந்த நிலையில் தூங்குகிறார்கள்.
நிலை #3
படத்தில் காட்டப்பட்டவாறான தூக்க நிலையில் 13% மக்கள் தூங்குவது தெரிய வந்தது. இப்படி தூங்குபவர்கள் திறந்த இயல்புடையவர்கள் மற்றும் நட்பாக பழகக்கூடியவர்கள். ஆனால் சில சமயங்களில் இவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பர். மேலும் இந்த மாதிரி தூங்குபவர்கள் சற்று சிக்கலானவர்கள் மற்றும் முடிவுகளை எடுக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்.
நிலை #4
படத்தில் காட்டப்பட்டவாறு கைகள் மற்றும் கால்களை நேராக நீட்டி மல்லாக்க படுப்பவர்கள், வெளிப்படையாக பேசாமல், அமைதியாக இருப்பார்கள் மற்றும் இவர்கள் வலுவான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். மேலும் இவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு விசுவாசமாகவும் உறுதியுடனும் இருப்பார்கள். இவர்களுக்கு தொந்தரவு செய்தால் பிடிக்காது. 8% மக்கள் இம்மாதிரியான நிலையில் தூங்குவது தெரிய வந்துள்ளது.
நிலை #5
குப்புறப் படுத்து தூங்குபவர்கள் தன்னம்பிக்கையானவர்கள், சென்சிடிவ்வானவர்கள் மற்றும் ஆர்வத்துடன் இருப்பார்கள். மேலும் இவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள் மற்றும் அவநம்பிக்கையான சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள். கணக்கெடுப்பில் இந்த நிலையில் 7% பேர் தூங்குவது தெரிய வந்துள்ளது.
நிலை #6
படத்தில் காட்டப்பட்டவாறு மல்லாக்கப் படுத்து கை, கால்களை விரித்து தூங்குபவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க தயாராக இருப்பார்கள் மற்றும் இவர்கள் நல்ல நண்பர்களை உருவாக்குவார்கள். இருப்பினும், இவர்கள் மற்றவர்களின் கவனத்தை எப்போதும் ஈர்க்க விரும்புவதில்லை. கணக்கெடுப்பில், 5% பேர் இந்நிலையில் தூங்குவது தெரிய வந்துள்ளது.