பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், தினமும் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
வைட்டமின் ஏ குறைபாடு மங்கலான பார்வையை ஏற்படுத்தும். பேரீச்சம்பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனைகளைத் தடுக்கலாம். பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் கண் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
பேரீச்சம்பழம் மற்றும் பாதாம் சேர்த்து பாலில் காய்ச்சினால் கை, கால்களில் உள்ள பலவீனம் மற்றும் பதற்றம் குணமாகும். ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது.
தினமும் மூன்று பேரீச்சம்பழம் சாப்பிடுவதால், அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து ரத்தசோகை வராமல் தடுக்கிறது.
பேரீச்சம்பழத்தில் சோடியம் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், பொட்டாசியம் அதிகமாக உள்ளது. தினமும் சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பேரீச்சம்பழங்களில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால், இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், எலும்பு தேய்மானம் ஏற்படாமல், எலும்புகள் வலுவடையும்.