சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி தழைகள் ஒருசில நாட்களிலேயே வாடிப்போய்விடும். டப்பாவில் அடைத்து வைத்திருந்தாலும் அழுகி போய்விடக்கூடும்.
ஒருசில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் இரண்டு வாரம் வரை அழுகாமல் பாதுகாக்கலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்: கொத்தமல்லி கட்டின் வேர்ப்பகுதியை நறுக்கிவிடவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அதில் கொத்தமல்லி தழையை சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின்பு நன்றாக கழுவிவிட்டு நிழலிலோ, மின் விசிறியிலோ உலரவைக்கவும். நீர்த்துளிகள் ஏதும் இல்லாமல் நன்கு உலர்ந்திருப்பதை உறுதி செய்த பிறகு பேப்பர் டவலில் ஒற்றி எடுக்கவும். பின்பு கொத்தமல்லி தழையை முழுவதுமாக பேப்பர் டவலை சுற்றி மூடிவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
பின்பு அந்த டப்பாவை பிரிட்ஜில் வைத்துவிட்டு சமையலுக்கு தேவைப்படும்போது கொத்தமல்லி தழையை எடுத்து பரிமாறலாம். சுமார் இரண்டு வாரங்கள் வரை கொத்தமல்லி தழை அழுகாமல் இருக்கும். பேப்பர் டவல் இல்லாவிட்டால் வெள்ளை பேப்பரில் கொத்தமல்லி தழையை நன்றாக சுருட்டிவைத்துவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.-News & image Credit: maalaimalar