சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற பல காரணங்களால் உடல் எடை விரைவாக கூடி விடுகின்றது. என்ன செய்தால் உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
- உடல் எடையை குறைக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவையும் அவசியமாகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தலாம்.
- பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், கலோரிகள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும். ஆனால் சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டிலுமே சம அளவு கலோரிகளே உள்ளன.
- சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டும் கரும்பு சாற்றில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும் அவற்றின் தயாரிப்பு செயல்முறைகள் வித்தியாசமானவை. கரும்பு சாறில் இருந்து சர்க்கரை பாகை மாற்ற கரி பயன்படுத்தப்படுகிறது.
- மேலும் சர்க்கரை தயாரிக்க பல வகையான ஃபார்மலின் சேர்க்கப்படுகிறது. ஃபார்மலின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயண பொருளாகும். எனவே சர்க்கரை எடுத்துக்கொள்வது நிச்சயம் நல்லதல்ல.
- ஆனால் வெல்லத்தில் எந்த வித ரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அதன் ஊட்டச்சத்து மதிப்பு சர்க்கரையை விட அதிகம். இரும்பு, தாதுக்கள், நார், கார்போஹைட்ரேட், புரதம், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.