22 61eff43d3
ஆரோக்கிய உணவு

அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து கொள்வதால் இந்த மருத்துவ நன்மைகள் உண்டாகுமாம்!தெரிஞ்சிக்கங்க…

தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக முக்கிய தாவரம் இதுவாகும். வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும்.

ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களை இது கொண்டுள்ளது.

அந்தவகையில் இதில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை தற்போது இங்கே பார்ப்போம்.

 

நெஞ்சு எரிச்சலை குணமாக்குகிறது. அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் கஷ்டப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அமில தன்மையை சமன் செய்து விரைவாக நெஞ்செரிச்சலை குணமாக்குகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை வாழைத்தண்டு கட்டுப்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோய்களோ வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து உடலின் செல்களில் இருக்கிற கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுபடுத்த உதவுகிறது.மேலும் பெண்களின் உடல் பலம் பெரும். மேலும் இந்த வாழைத்தண்டானது வயிற்றில் உள்ள புண்களை குணமாக்க உதவுகின்றது.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

Related posts

வேர்க்கடலை சாதம் செய்முறை

nathan

பால், பழம்… சேர்த்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்? எதோடு எதைச் சாப்பிடக் கூடாது?

nathan

முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழம்!…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…

nathan

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்

nathan

காலை உணவாக கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவோர் கவனத்துக்கு…!

nathan

உணவுகளில் உள்ள பூச்சி மருந்து, ரசாயனம் அகற்ற 6 எளிய வழிகள்..!

nathan

பூண்டுப்பால் அருந்துவதனால் என்ன பலன் தெரியுமா? படியுங்க….

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்…!

nathan