33.6 C
Chennai
Friday, May 31, 2024
weight
ஆரோக்கிய உணவு

எடையைக் குறைப்பது எளிது! உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறி, பழங்கள்

உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை:-

டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்க சுவாசதடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்கு பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு. எனவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது எளிது.

உணவை பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களை தவிர்க்க வேண்டும்.

கொழுப்புள்ள உணவை தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை ஜீரணிக்க வைத்துவிட வேண்டும். உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

‘உடல் எடையை குறைக்கிறேன்’ எனப்பலரும் காலையில் சிற்றுண்டியை தவிர்க்கிறார்கள். இது தவறு. இதனால் மதிய உணவு அதிகமாகிவிடும். எனவே, காலை உணவு கட்டாயம். காலையில் கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம். காலை டிபனுக்கு கேழ்வரகு இட்லி, இடியாப்பம், புட்டு, உப்புமா, மிளகுத்தினை பொங்கல் சாப்பிடலாம்.

தேங்காய் சட்னிக்கு பதிலாக, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம்.

கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

பதிலாக வேர்க்கடலை, எள்ளு உருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழச் சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள். மாலையில் பழச்சாறு, காய்கறி சூப் சாப்பிடுங்கள். கீரைகள், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய் உடலுக்கு தேவை. மேலும் கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அத்துடன் உடல் பருமனையும் குறைக்க உதவும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும்!

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்நீர் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

nathan

உடலில் கொழுப்பை குறைக்கும் பச்சை ஆப்பிள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்போது கொடுக்க வேண்டும்?

nathan

அவசியம் படிக்க.. உடல் உஷ்ணம் அதிகரிப்பால் ஏற்படும் அதீத பாதிப்புகள்

nathan

நீங்கள் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள் இதை படிங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்….!

nathan

தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?

nathan

அப்ப உடனே இத படிங்க… பேலன்ஸ்டு டயட்

nathan