31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

முருங்கைப்பூ தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக முருங்கையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

இதன் இலை, வேர், காய், பிசின், பூ என அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்த முருங்கை பூவை தேநீராக பருகினால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றது.

 

தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

முருங்கைப்பூ தேநீர் தயாரிப்பது?

முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தேநீர் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இதனை பாலில் இட்டு கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.
நன்மைகள்

முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, உடலில் உண்டாகும் பூஞ்சை பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.
சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ தேநீரை பருகலாம்.
வெள்ளைப்போக்கு உடலுக்கு தேவையற்ற சுரப்பிகளால் ஏற்படுகிறது. வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூ தேநீர் பயன்படுகிறது.
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ தேநீர் அறுமருந்தாக பயன்படுகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
முருங்கைப்பூ தேநீரை காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. உடலுக்கு இது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

Related posts

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் திக்கி திக்கி பேச இவையெல்லாம் தான் காரணமாம்..

nathan

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!

nathan

உலர்ந்த திராட்சைகளை கர்ப்ப காலத்தின் போது பெண்கள் சாப்பிடலாமா ?

nathan

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

nathan

தூக்கமின்மையால் பெண்களுக்கு வரும் நோய்கள்

nathan

கர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா -தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா! அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கொசுக்களால் இவ்வளவு நோய்கள் பரவுகிறதா?எப்படி மீளலாம்

nathan