FB IM
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிக மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லி:தெரிஞ்சிக்கங்க…

கொத்தமல்லி இலையில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலேட், பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன. கொத்தமல்லி இலைகளில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது, எனவே அவை எடை இழப்பிற்கும் பெரிதும் உதவுவதாக உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் தெரிவித்துள்ளார்.

கொத்தமல்லி இலையில் இருக்கும் சத்துக்கள்: கொத்தமல்லி இலைகள் பல்வேறு நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.

கொத்தமல்லி இலையினால் கிடைக்கும் நன்மைகள் :

இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் : கொத்தமல்லி இலையை சாப்பிடுவதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனுடன் கெட்ட கொலஸ்ட்ரால் அதாவது LDL அளவும் குறைகிறது. குளிர்காலத்தில் கொத்தமல்லி இலையை சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் : சிறுநீரகத்தில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குவதில் கொத்தமல்லி மிகவும் சிறந்தது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி இலைகளை ஜூஸ் வடிவிலோ அல்லது சட்னி வடிவிலோ உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில் இது இன்சுலின் சுரக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும் : கொத்தமல்லி இலைகளை சாப்பிடுவதால் கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகிறது, இதனால் வாயு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. கொத்தமல்லி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி வலுப்படும்.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் : இரத்த சோகையால் அவதிப்படுபவர்களுக்கு கொத்தமல்லி இலை சிறந்த மருந்தாக அமையும். கொத்தமல்லி இலைகளில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. இரத்த சோகை ஏற்படுவதற்கு இரும்புச்சத்து குறைவது தான் முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

சருமம் பளபளவென இருக்கும் : கொத்தமல்லி இலைகளை சாப்பிடுவதால், சருமம் உள்ளிருந்து சுத்தம் ஆவதால், சருமம் பளிச்சென்று இருக்கும். சருமம் மென்மையாக இருக்கும். முகப்பரு, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை நீக்கவும் இது உதவுகிறது.

Related posts

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து..!!

nathan

கிளைக்கோலிக் ஆசிட் கிரீம் பயன்பாடுகள் (Glycolic Acid Cream Uses in Tamil)

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆண்கள் கட்டாயம் இதை திருமணத்திற்கு பின் சாப்பிட வேண்டும்.. முக்கியமான உணவுகள்..!

nathan

அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்!

nathan

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி

nathan

உங்களுக்கு தெரியுமா இஞ்சியை அதிக அளவு எடுத்துகொள்ளக்கூடாது ஏன்…?

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டில் இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க சில யோசனைகள்!

nathan

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை

nathan

உங்களுக்கு தெரியுமா மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan