பொதுவாக காலை உணவை சாப்பிட்டால் மட்டும் தான் நாள் முழுவதும் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள் காலை உணவைத் தவிர்ப்பதோடு, காலை உணவாக உண்ணும் உணவுகளில் தவறுகளை செய்கின்றனர்.
குறிப்பாக ஆரோக்கியமான சில உணவுகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
அந்தவகையில் தற்போது எந்த உணவுகளை எல்லாம் காலையில் வெறும் வயிற்றில் காலை உணவாக உட்கொள்ளக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
தக்காளியை வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆபத்தானதாகும். ஏனெனில் தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே தக்காளியை காலை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். அதுவும் தக்காளி ஜூலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது கல் அபாயத்தை அதிகரிக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள டானின்கள் மற்றும் பெக்டின், வாய்வுத் தொல்லை, அமில சுரப்பு மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை உண்டாக்கும். ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை காலை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
பாலுடன் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அவற்றில் உள்ள மக்னீசியம் இருமடங்காகி, மலச்சிக்கலை உண்டாக்கும். வேண்டுமானால் வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடுவதற்கு முன் பிரட் சாப்பிடுங்கள்.
புளிப்புச் சுவை கொண்ட பழங்களான சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.
காரமான உணவுகளை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். ஏனெனில் காரமான உணவுகளில் உள்ள மசாலாப் பொருட்கள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனவே எப்போதும் காரமான உணவுகளை காலை உணவின் போது எடுக்காதீர்கள்.