27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
1 coverimagebenefits
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வாக்கிங்கை விட அதிக ஆரோக்கிய நன்மைகள் தரும் ஜாக்கிங்!!!

தானத்தில் சிறந்த தானம் எப்படி இரத்த தானமோ, அவ்வாறு பயிற்சியில் சிறந்த பயிற்சி ஓட்டப் பயிற்சி என்று கூறலாம். ஆம்! மூளையில் இருந்து கால்கள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வாரித் தருகிறது ஓட்டப் பயிற்சி.

 

எலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என பல உடல்நல நன்மைகளை தருகிறது ஓட்டப்பயிற்சி. அதற்கென்று நீங்கள் உசைன் போல்ட்டை போல எல்லாம் ஓட வேண்டும் என்றில்லை. மிதமான வேகத்தில் ஜாக்கிங் போல ஓடி பயற்சி செய்தாலே போதுமானது!!!

 

இனி, ஜாக்கிங் செய்வதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

மனநிலையில் மாற்றம்

மன அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது தினமும் அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் மனநிலையில் நல்ல முன்னேற்ற காணலாம்.

ஆயுள் நீடிக்கும்
தினமும் 10 – 20 நிமிடங்கள் ஜாக்கிங் செய்து வந்தால், உங்கள் மரணத்திற்கான சதவீதம் 30 – 60% குறைகிறதாம்.

உடல் எடை

தினமும் ஜாக்கிங் செய்வதனால் உடல் எடைக் குறையும். வாக்கிங் செய்வதை விட இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை அதிக உடல் எடைக் குறைவு ஏற்படும்.

மூட்டு வலி

தினமும் ஜாக்கிங் செய்பவர்களுக்கு மற்றவர்களை விட 25% குறைவாக தான் மூட்டு வலிப் பிரச்சனைகள் வருகிறது.

வளர்ச்சிதை மாற்றம்
ஜாக்கிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்தால், உங்கள் நுரையீரல் நன்கு விரிவடையும், இரத்த ஓட்டம் சீராகும், உடற்திறனில் நல்ல மாற்றம் தெரியும்.

இதயம்

தினமும் குறைந்தது ஒரு கி.மீ தூரம் ஜாக்கிங் சென்று வந்தீர்கள் என்றால் இதயப் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் 50% வரை குறையும்.

நீரிழிவு நோய்
குறைந்தது வாரம் ஐந்து நாட்களாவது அரைமணி நேரம் ஜாக்கிங் செய்துவந்தால் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

எலும்புகள்

தினமும் ஜாக்கிங் செய்வதனால் உங்கள் எலும்புகள் வலுமை அடைகின்றன. இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டுப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

உறக்கம்

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதனால் தூக்கமின்மை குறையும், நல்ல உறக்கம் வரும்.

ஞாபக சக்தி

ஜாக்கிங் செய்வதனால் உங்கள் மூளை சுறுசுறுப்பு ஆகிறது, இதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Related posts

ஸ்வீட் எஸ்கேப் – 6

nathan

‘இந்த’ விஷயங்கள ஆண்கள் ரொம்ப ரகசியமாவே வைச்சிருப்பாங்களாம்…அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடை அதிகரிப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள்!!!

nathan

தூக்கம்… அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்…

nathan

கோடை காலத்தின் போது பெண்ணுhealth tip tamil

nathan

புற்றுநோயின் பொதுவான அறிகுறி

nathan

வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

nathan

பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?

nathan