காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான். அதிகளவு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.
தேவையான பொருட்கள் :
சுக்கு – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பரங்கிக்காய் – சிறிய துண்டு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
• வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.
• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
• தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
• தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.