31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

உடல் எடை குறைக்க வேண்டுமா?

உடல் எடையை குறைக்க வேண்டுமா, இதோ ஆரோக்கியமான தகவல். குண்டான உடம்பின் எடையை மென்மேலும் குறைக்க வேண்டும் என விழைபவர்கள், தங்களது காலை உணவாக, இரண்டு முட்டைகளை மட்டுமே உட்கொள்வது நன்மை பயக்கும் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இது தொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவருமான நிகில் வி. துரந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், கலோரி குறைவான உணவுமுறையை பின்பற்றும் வகையில், காலை உணவாக இரு முட்டைகளை மட்டுமே உட்கொண்டு வந்தால், அதிக பருமன் மிக்கவர்களது உடல் எடையானது, வேறுவகை காலை உணவை உட்கொள்பவர்களைக் காட்டிலும் 65 சதவிகித அளவில் குறையக் கூடும் என்பது தெரியவந்துள்ளது. “இரு முட்டைகளை காலை உணவாக உண்பதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் புத்துணர்வும் பெறலாம்,” என்றார் துரந்தர்.

இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, முட்டை உணவு தொடர்பான முந்தைய ஆய்வுகளின் முடிவுகளையும் உறுதி செய்துள்ளது. அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான சாத்தியமும் குறைவு என்கின்றன, முந்தைய ஆய்வுகள். இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிசிட்டியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

எடையை குறைக்கும் ‘பழுப்பு கொழுப்பு’

nathan

செலவே இல்லாமல் அதிகரித்த எடையை குறைக்க….

sangika

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா! ~ பெட்டகம்

nathan

உங்களுக்கான தீர்வு விரைவில் உடல் எடை குறைக்க??

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்!

nathan

தொளதொளவென தொங்கும் சதையை, இறுக்கமாக ஆக்குவதற்கான வழிகள்!!!

nathan

ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க அன்னாசிப்பழம் டயட் ஃபாலோ பண்ணுங்க!

nathan

என்ன  எடை  அழகே!

nathan

கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி…

nathan