30.7 C
Chennai
Saturday, Aug 29, 2026
எடை குறைய

மெலிதான உடல் வாகு வேண்டுமா?

 

மெலிதான உடல் வாகு வேண்டுமா?

மெலிதான உடல்வாகை விரும்பும் பெண்களுக்கான உணவு முறைகள்:

பெரும்பாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையே உடல்நலக்கேட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதே போல் அதிக  அளவிலான உணவும் உடல் நலத்தை கெடுக்கின்றது. கொழுப்பு மற்றும் உடலின் சர்க்கரை அளவை குறைக்க மேற்கொள்ளப்படும் உயர் உணவு கட்டுப்பாடும், கார்போஹைட்ரேட்டிர்கான குறைந்த உணவு கட்டுப்பாடும் சர்க்கரை நோய்,
வலிப்பு போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைகிறது.

பெண்கள் பெரும்பாலும் மெலிதான உடல் அமைப்பினை விரும்பி உணவு உண்ணாமல் இருப்பதனை ஆரோக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். அவ்வாறு உணவுக்கட்டுப்பாட்டினை மேற்கொள்ளும்போது ஊட்டச்சத்தின் அளவினை வேறு சில பொருட்களை உண்பதன் மூலம் ஊட்டச்சத்தின் அளவினை சமநிலைப் படுத்த வேண்டும். பெண்கள் தங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு பினபற்ற வேண்டிய ஓரு சில குறிப்புகள் பின்வருமாறு:

* உணவு உண்ணாமல் இருப்பதனை தவிர்க்க வேண்டும். உடல் எடை குறைய உணவு உண்ணாமல் இருப்பது உடல் எடை அதிகரிக்க வழிசெய்கிறது. ஏனெனில், உணவு உண்ணாமல் இருப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே கொழுப்பு, கலோரி அடங்கிய பொருட்களை உட்கொள்ள இது ஏதுவாகிறது.

* மேலும் நார்ச்சத்துப்பொருட்களான பருப்பு வகைகள், தானிய வகைகள், பீன்ஸ், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு பொருட்கள் கலோனரி வகை நோய்களான இதய நோய், சர்க்கரை ஆகியவற்றை குறைக்க வழிசெய்கிறது.

* இறைச்சி விரும்பி உண்ணுபவர்கள் உணவுகட்டுப்பாட்டின் போது மீன், கோழி இறைச்சியில் உள்ள தோல் பகுதிகளை தவிர்த்தல் மூலம் கலோரியின் அளவு சரியான விகதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

* ஒவ்வொரு உணவுப்பொருட்களிலும் ஒரு சில ஊட்டச்சத்து அதிகமாக காணப்படும், எல்லா வகையான ஊட்டச்சத்தும் உடலுக்கு தேவையானதாக இருக்காது. எனவே தேவையான உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

* அதிக அளவிலான சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து அடங்கிய பொருட்களான சமோசா, சிப்ஸ், கேக் போன்ற பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது, இவைகளுக்கு பதில் அதிக அளவிலான பழங்கள், கோதுமையினால் செய்யப்பட்ட எண்ணெயற்ற பொருட்கள், சூப் போன்ற பொருட்களை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு உணவு வேளையின்போதும் பழக்கலவை, பச்சை காய்கள் உண்பது மிகவும் நல்லது. உணவை நன்கு மென்று உட்கொள்வது செரிமானத்திற்கு உதவிப்புரிகிறது.

மெலிதான உடல்வாகை விரும்பும் பெண்கள் மேற்கண்ட முறைகளை பின்பற்றினால்  ஆரோக்கியமான உடல்நலத்துடன் கூடவே அழகான உடலமைப்பையும் பெறலாம்.

Related posts

குண்டாக இருக்கிறீங்களா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்.!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.

nathan

எடைக் குறைப்பு என்று வந்தால் ஏற்ற முறை

nathan

உங்களுக்கு நீர் உடம்பா? அதை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

வெங்காயம் பயன்படுத்தி எடை இழப்பதற்கு 2 பயனுள்ள வழிகள்

nathan

ஸ்லிம்மாக வேண்டுமா? இஞ்சி கற்றாழை ஜூஸ் குடிங்க

nathan

விரைவில் உடல் எடையை குறைக்கும் 3 உடற்பயிற்சிகள்

nathan

குறுக்கு வழியில் எடை குறைக்கலாமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

nathan