28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
16 say no
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகமாக வேலை செய்ய முடியாது என்று எப்படி சொல்லலாம்?தெரிஞ்சிக்கங்க…

கார்பரேட் உலகத்தின் கடுமையான வேலைகளால் நம்மில் பலருக்கும் ஓய்வு நேரம் என்பது கனவாகவே உள்ளது. ஓவர் டைம் வேலை பார்ப்பதென்பது இப்பொழுதுதெல்லாம் சகஜமாகி விட்டது. அதிகப்படியான வேலையைக் கொடுத்து மூத்த அதிகாரி உங்களுடைய சொந்த நேரத்தை சாப்பிடும் போது, நீங்கள் பெறக்கூடிய சம்பளத்தை விட அதிகமான பொறுப்புகளை சுமக்க நேரிடும்.

இதுப்போன்ற நேரங்களில் நீங்கள் ‘முடியாது’ என்று மறுத்து விட கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ‘வேலை செய்ய முடியாது’ என்று எப்படி சொல்லாம் என்பதை இந்த கட்டுரை தெளிவுபடுத்தும்.

அதிகமாக வேலை செய்ய முடியாது என்று எப்படி சொல்லலாம்?

முன்னுரிமை

மிகவும் முக்கியமான வேலை ஒன்றை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போது, சக பணியாளர் ஒருவர் வேறொரு வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டால், நான் செய்து கொண்டிருக்கும் வேலையும் முக்கியமானது தான் – அதை உடனடியாக நிறுத்தி விட இயலாது என்று சொல்லுங்கள். ‘முடியாது’ என்று சொல்லுவதில் உள்ள கடினத்தன்மை நமக்கு தெரியுமென்றாலும், நாம் செய்யும் பணியே நமக்கு முக்கியமானது என்பதும் உண்மை தானே.

‘ஆம்’ என்னும் படுகுழி

வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் பலரும் விரிக்கும் வலைகளில், தொழில்முறைத்துவம் தெரிந்த பணியாளர்கள் கூட சில நேரங்களில் ‘ஆம்’ என்று சொல்லி விழுந்து விடுவார்கள். இதுப்போன்ற மனிதர்களை அடையாளம் கண்டு, ‘ஆம்’ என்று சொல்வதை நிறுத்திவிடுங்கள். இல்லாவிடில், இதுவே ஒரு பழக்கமாகி, தினமும் உங்கள் தலையில் அதிகமான சுமை ஏறும்.

சுயமாக செயல்படுதல்

தொழில் போட்டியும், வேகமும் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில் அனைத்து திசைகளிலிருந்தும் நமக்கு அழுத்தம் பிறக்கும். எனினும், இந்த அழுத்தமானது – வேலைப்பளுவானது உங்களுடைய சிறந்த பங்களிப்பை எடுத்துக் கொண்டால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாக இருப்பீர்கள். உங்களுடைய சொந்த நேரத்தில் இவ்வாறு அதிகப்படியான வேலை செய்யும் போது, ‘முடியாது’ என்று சொல்ல வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகி விடுகிறது.

மாற்று வழிகளை பரிந்துரைத்தல்

மறைமுகமாக வேலை செய்ய முடியாது என்று சொல்வதற்கு மிகவும் சிறந்த வழிகளில் ஒன்றாக இதைச் சொல்ல முடியும். சக பணியாளரோ அல்லது மேலாளரோ அதிகமான வேலையை உங்களிடம் தரும் போது, சமர்ப்பிக்க வேண்டிய நாளை மாற்றுமாறு கேட்டுக் கொள்வதும், அந்த வேலை பிரித்து கொடுக்க சொல்லியும் அல்லது வேறு யாரிடமாவது கொடுக்குமாறு சொல்வதும் சிறந்த மாற்று வழிகளாக உள்ளன. அலுவலகத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே பணி புரியவில்லையல்லவா? எனவே வேறொரு பணியாளரிடம் அந்த பணியை கொடுப்பதில் தவறில்லை.

உங்களுடைய அட்டவணையை பாருங்கள்

வேறொருவருடைய வேலையை செய்வதாக ஏற்றுக் கொள்ளும் முன்னர், உங்களுக்கு தரப்பட்டுள்ள பணியை குறித்த நேரத்தில் செய்ய முடியுமா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியை முதலில் செய்து முடிக்க வேண்டியது மிகவும் முக்கியமான பணி என்பதை நீங்கள் உணர வேண்டியது அவசியமாகும், நீங்களும் ஏகப்பட்ட பணிகளை செய்து முடிக்க வேண்டியிருப்பதால், தயங்காமல் ‘மன்னிக்கவும், என்னால் உங்களுக்கு உதவ முடியாது, நான் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன’ என்று சொல்லி விடுங்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் பணி செய்யுமாறு கேட்பவர் உங்கள் நிலையை புரிந்து கொள்வார்.

அதிகமான வேலையின் மதிப்பு

இது சற்றே வித்தியாசமான செயலாக இருந்தாலும், அதிகமான வேலையின் மதிப்பை அளவிட வேண்டியது மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும். நீங்கள் செய்யக் கூடிய இந்த அதிகப்படியான பணியினால், எதையும் நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது என்றாலோ அல்லது எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்றாலோ ‘முடியாது’ என்று சொல்லுங்கள் உறுதியாக. இது போன்ற விஷயங்களை நேரத்தை விரயம் செய்வதில் அர்த்தம் இல்லை.

நண்பர்கள் யார்?

இறுதியாக, உங்களுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் யார் மற்றும் அதில் உங்களுடைய நண்பராக இருப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களால் ‘முடியாது’ என்ற வார்த்தையை, ஆள் அறிந்து எளிதாக சொல்லி விட முடியும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…?

nathan

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

nathan

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

nathan

இதெல்லாம் சைவ உணவே கிடையதாமா… இவளோ நாள் உங்கள நல்லா ஏமாத்தியிருக்காங்க!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… உடலில் நீர்ச்சத்து குறைந்தால்…?

nathan

குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி டர்ர்ர்ர்ர்… கட்டுப்படுத்த சில யோசனைகள்!

nathan

ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்!

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைக்கு மசாஜ் செய்ய ஏற்ற சிறப்பான 10 எண்ணெய்கள்!!!

nathan