28.8 C
Chennai
Sunday, Jun 16, 2024
21 619
சமையல் குறிப்புகள்

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? இப்படி செஞ்சு சாப்பிடுங்க

தென்னிந்தியாவின் காலை உணவில் இட்லிக்கு என்றுமே முதலிடம் உண்டு, 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை இட்லியை தாராளமாக சாப்பிடலாம்.

ஆனால் வெறும் இட்லியை மட்டுமே சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இதோ 10 நிமிடத்தில் சுவையான சாண்ட்விச் இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 2 கப்.
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (விருப்பம் போல்) – அரை கப்,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
மல்லித்தழை, கறிவேப்பிலை – தலா சிறிதளவு.

செய்முறை
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு சேர்க்கவும், இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து, தக்காளி சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து காய்கறிகளை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போன பின்னர் மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடுங்கள்.

நன்கு வெந்ததும் எடுத்தால் சுடச்சுட சாண்ட்விச் இட்லி தயார்!!!

Related posts

சுவையான தக்காளி குருமா

nathan

“நீங்க உங்கள் சமையலறையில் (Plastic Cutting Board) பிளாஸ்டிக் கட்டிங் போட் ஐ வைத்து தான் காய்கறிகளை வ…

nathan

பன்னீர் 65

nathan

சுவையான கேரட் சீஸ் சப்பாத்தி

nathan

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan

சுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை

nathan

இனியெல்லாம் ருசியே! – 4

nathan

துர்நாற்றம் வீசும் பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தம் செய்ய டிப்ஸ்

nathan

ஒயிட் சாஸ் பாஸ்தா

nathan