30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சமையல் குறிப்புகள்

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்

பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான காய்கறி தான் உருளைக்கிழங்கு. ஏதேனும் பண்டிகை என்றால் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் உருளைக்கிழங்கை கொண்டு ஒரு ரெசிபியாவது செய்யப்பட்டிருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கை கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்து போர் அடித்திருந்தால், அதனைக் கொண்டு பொடிமாஸ் செய்து சுவைத்துப் பாருங்கள்.

இங்கு உருளைக்கிழங்கு பொடிமாஸை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Potato Podimas Recipe
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை வாணலியில் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு 2-3 நிமிடம் நன்கு வதக்கி, தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவினால், உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி!!!

Related posts

பேக்கிங் பவுடர் – பேக்கிங் சோடா ரெண்டையும் எப்படி கண்டுபிடிக்கிறது…தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான ரவை தேங்காய் உப்புமா

nathan

வறுத்து அரைச்ச சாம்பார்

nathan

சேனைக்கிழங்கு மசாலா

nathan

அசத்தலாக சிக்கன் பெப்பர் கிரேவி! வெறும் 10 நிமிடத்தில்

nathan

சுவையான வெஜிடேபிள் குருமா

nathan

சுவையான பனீர் டிக்கா! தயார் செய்வது எப்படி?

nathan

எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட்

nathan

சுவையான பீட்ரூட் மசாலா தோசை

nathan