சமையல் குறிப்புகள்

சூப்பரான சிக்கன் -தேன் சூப்

 

தேவையான பொருட்கள்:

சிக்கன் பீஸ் – ½ கப்
இஞ்சி மற்றும் பூண்டு – 1 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது)
கேரட், ஸ்வீட் கார்ன், பட்டாணி – ½ கப் (நறுக்கப்பட்டது)
மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்
கொத்துமல்லி தழை – 2 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது)
சால்ட் – சுவைக்கு ஏற்ப அளவு
பெப்பர் – சுவைக்கு ஏற்ப
தண்ணீர் – 3 கப்
தேன் – 2 லிருந்து 3 டீ ஸ்பூன்

செய்முறை:

1.ஒரு பானையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிக்கன், கேரட், பட்டாணி, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.
2.அத்துடன் தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள்.
3.மஞ்சள், பெப்பர் மற்றும் சால்டையும் அத்துடன் சேர்த்து கொள்ளுங்கள்.
4.இப்பொழுது பானையிலிருக்கும் அனைத்தையும் கொதிக்க வையுங்கள்.
5.சிக்கன் அரை நிலையில் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
6.இப்பொழுது, கொத்துமல்லி தழைகளை அதில் தூவி…பானையை மூட வேண்டும்.

7.சிக்கன் முழுவதுமாக வேகும் வரை காத்திருக்க வேண்டும்.
8.ஒரு போதும் ஓவர்குக் ஆகும் அளவிற்கோ அல்லது சிக்கன் சவசவ எனவும், மற்றும் ரப்பர் போல் (கடிக்க கடினம்) ஆகும் அளவிற்கோ விட்டுவிடாதீர்கள்.
9.இப்பொழுது பௌலில் சூப்பை கொட்ட வேண்டும்.

10.அதில் இரண்டு டீ ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
11.மறுபடியும் ப்ரஸ் கொத்துமல்லி இலைகளை கொண்டு சூப்பை அழகுபடுத்தவும் (மேலே தூவ)
12.அதனை சுட சுட எடுத்து…ப்ரட் அல்லது கார்லிக் ப்ரட் ஸ்டிக்குகளுடனோ சேர்ந்து டேஸ்ட் செய்ய… எல்லையில்லா ஆனந்தத்தில் நீங்கள் மூழ்வீர்கள் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் வேண்டாம்.

 

Related posts

சூப்பரான பஞ்சாபி சன்னா மசாலா இருந்தால் குழந்தை கூட இன்னொரு சப்பாத்தி கேட்கும்

nathan

சூப்பரான கார்ன் இட்லி

nathan

முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே?

nathan

சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி!…

sangika

சுவையான மல்லிகைப் பூ போல இட்லி வேண்டுமா?

nathan

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

டிப்ஸ்… டிப்ஸ்…டிப்ஸ்… டிப்ஸ்…!

nathan

சுவையான தினை குழிப்பணியாரம்

nathan

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை..

sangika