12 narthangai rice recipe
ஆரோக்கிய உணவு

சூப்பரான நார்த்தங்காய் சாதம்

எலுமிச்சை போன்று புளிப்பாகவும், ஆனால் பெரியதாக இருப்பது தான் நார்த்தங்காய். பொதுவாக இதனைக் கொண்டு ஊறுகாய் தான் செய்வார்கள். ஆனால் இதனைக் கொண்டு கலவை சாதம் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் இது புளிப்பாக மட்டுமின்றி லேசாக கசப்பாகவும் இருக்கும். இருப்பினும் இதன் சுவை அனைவருக்குமே பிடிக்கும்.

இங்கு அந்த நார்த்தங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். பேச்சுலர்கள் கூட இந்த கலவை சாதத்தை முயற்சிக்கலாம்.

Narthangai Rice Recipe
தேவையான பொருட்கள்:

சாதம் – 3 கப்
நார்த்தங்காய் – 1 (பெரியது மற்றும் சாறு எடுத்துக் கொள்ளவும்)

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் பெருங்காயத் தூள் வரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, நார்த்தங்காய் சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, பின் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டினால், நார்த்தங்காய் சாதம் ரெடி!!!

Related posts

நீண்ட நாட்கள் பொருட்கள் கெடாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா காலிஃப்ளவர் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ?

nathan

காராமணி சாண்ட்விச்! செய்து பாருங்கள்…

nathan

பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடிங்க? அப்புறம் தெரியும் மாற்றம்

nathan

எந்த நோய்க்கு எந்த பழம் மிகவும் நல்லது? இதை படிங்க…

nathan

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

nathan

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

nathan

7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்.

nathan

கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்

nathan