24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
sesame seeds heart
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உணவில் எள் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எள்ளுருண்டை என்றால் பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். ஏனெனில் எள்ளுருண்டை அவ்வளவு சுவையாக இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்பட்டுள்ள வெல்லம் மட்டும் காரணம் அல்ல, அதில் உள்ள எள் தான் முக்கிய காரணம். இந்த எள் சுவையானது மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக்கூடியதும் கூட.

இதற்கு எள்ளில் நிறைந்துள்ள ஊட்டசத்துக்கள் தான் காரணம். அதில் மாங்கனீசு, காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், ட்ரிப்டோபன், ஜிங்க், நார்ச்சத்து, தையமின், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் மற்றும் புரோட்டீன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சத்துக்கள் நிறைந்த எள்ளை கொண்டு தயாரிக்கப்படுவது தான் நல்லெண்ணெய். எப்படி உணவில் நல்லெண்ணெய் சேர்த்தால் நிறைய நன்மைகள் கிடைக்கிறதோ, அதை விட அதிகமாக எள்ளை உணவில் சேர்த்து வந்தால் பெறலாம். சரி, இப்போது அந்த எள்ளை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அத்தகையவர்கள் எள்ளை உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராவின் அளவைக் குறைக்கும்.

நீரிழிவு

எள்ளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், நீரிழிவு தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம். இதற்கு அதில் உள்ள மக்னீசியம் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் தான் காரணம். மேலும் ஆய்வு ஒன்றிலும், எள்ளிற்கு நீரிழிவை எதிர்த்துப் போராடி தடுக்கும் குணம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்த அழுத்தம்

அதிக அளவில் டென்சன் ஆகிறவர்கள், தினமும் உணவில் எள் சேர்த்து வந்தால், டென்சன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

ஆரோக்கியமான இதயம்

எள்ளை அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்து வருவதன் மூலம், இதய பிரச்சனைகளான பெருந்தமனி தடிப்பு புண்கள் போன்றவை வரும் வாய்ப்புகள் குறையும். அதுமட்டுமின்றி வேறு சில இதய பிரச்சனைகளையும் வராமல் தடுக்கலாம்.

புற்றுநோய்

ஆய்வு ஒன்றில், அன்றாடம் எள் அல்லது நல்லெண்ணெயை உணவில் சேர்த்து வருவதன் மூலம், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதில் உள்ள மக்னீசியம் தான் முக்கிய காரணம்.

வலிமையான எலும்புகள்

எள் சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் வலிமையடையும். ஏனெனில் அதில் ஜிங்க் அதிகம் இருக்கிறது. இது எலும்பின் அடர்த்தியை பாதுகாக்கும். மேலும் இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையோடு இருக்கும்.

செரிமானம்

எள்ளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதன் சாப்பிட்டு வந்தமால், குடல் மற்றும் செரிமான பாதை சுத்தமாகி, குடலியக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

பாலுணர்ச்சியைத் தூண்டும்

முக்கியமாக எள் சாப்பிட்டு வந்தால், பாலுணர்ச்சி அதிகரிக்கும். இதற்கு அதில் நிறைந்துள்ள ஜிங்க் தான் காரணம். மேலும் ஆண்கள் இதை சாப்பிட்டு வந்தால், விந்தணு உற்பத்தி அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஆரோக்கியமான அழகான சருமம்

உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்பட வேண்மெனில், உணவில் சேர்த்து வாருங்கள். ஏனெனில் எள்ளில் நிறைந்துள்ள அதிகப்படியான ஜிங்க், கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு, சருமத்தின் நிறத்தையும், அழகையும் அதிகரிக்க உதவும். அதிலும் இதன் எண்ணெயைக் கொண்டு, வாரம் ஒருமுறை பாடி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு இருக்கும்.

Related posts

இத படிங்க கருவில் உள்ள குழந்தையின் முளை வளர்ச்சிக்கு பயன்படும் கிவி பழம்

nathan

சளி, இருமலுக்கு சிறந்த சித்தரத்தை பால்

nathan

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!

nathan

எடை குறைப்பு உணவு பட்டியல் – weight loss food chart in tamil

nathan

சுவையான குடைமிளகாய் மசாலா

nathan

உங்களுக்கு தெரியுமா கொடிய நோய்களை எல்லாம் குணப்படுத்த கூடிய மருத்துவ குணம் முள்ளங்கிக்கு உண்டு என ?

nathan

small onion benefits in tamil -சின்ன வெங்காயம்

nathan

தக்காளி சாலட்

nathan

இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்கள்!!!

nathan