32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சை சிரப் பண்றதும் எளிது – பயன்களும் பல

பொதுவாகவே எப்படிப்பட்ட இனிப்பு பலகாரங்களை தயாரிப்பதற்கும் சர்க்கரையே பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. இது தவிர சாஸ், டிப், சாண்ட் விச் ஸ்ப்ரெட், குளிர்பானங்கள் போன்றவற்றிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளால் உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் அதிகரிக்கிறது. மேலும் மிக விரைவில் சருமத்தில் இளமை தோற்றத்தை போக்கி முதுமை தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரையை தவிர்த்து இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுதியான பேரிச்சையை எப்படி சேர்த்து கொள்வதென்று பார்ப்போம்.

பேரிச்சையின் நன்மைகள்

பேரிச்சையில் புரதம், நார்ச்சத்து, ஜிங்க், மாங்கனீஸ், மக்னீஷியம்,இனிப்பு போன்ற சத்துக்கள் இருக்கின்றன.
பேரிச்சையை சாப்பிடுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.ஏனெனில் 100 கிராம் பேரிச்சையில் 282 கிலோ கலோரிகள் உள்ளது. பேரிச்சை சிரப் கொண்டு கேக், கப் பேக், க்ரானோலா பார், புட்டிங், அல்வா, லட்டு மற்றும் பர்ஃபி போன்ற இனிப்புகளை தயாரிக்கலாம்.

பேரிச்சை பேஸ்ட் தயாரிக்க

பேரிச்சையை,வெதுவெதுப்பான நீரில் போட்டு சில மணி நேரங்கள் ஊற வைக்கவும். ஊறவைத்த பேரிச்சையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். மேலும் உப்பு அல்லது பட்டைத்தூள் சேர்த்து கொள்ளவும், இந்த பேஸ்டை தேன் அல்லது மேப்பிள் சிரப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

பேரிச்சை சிரப் தயாரிக்க கொட்டை நீக்கிய பேரிச்சையை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பயன்படுத்தலாம். இதே நீரை மிதமான சூட்டில் சில மணி நேரங்கள் கொதிக்க வைப்பதால் இனிப்பான பேரிச்சை சிரப் ரெடியாகிடும்.

Related posts

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

எண்ணெய் சேர்க்காத வெஜ் குருமா

nathan

சத்தான சுவையான கார்லிக் பிரட்

nathan

தலைச் சுற்றலுக்கு எளிய மருந்தான நெல்லிக்காயை பயன்படுத்துங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்க முடியும்!

nathan

உடல்வலி நீக்கும் நாவல் பழச்சாறு பற்றி தெரியாத விடயங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை சாறு

nathan

உங்களுக்கு தெரியுமா கிராம்பின் மருத்துவ நன்மைகள்?

nathan

கிரீன் டீக்கு பதிலா இந்த சிகப்பு டீயை குடிச்சு பாருங்க… இவ்வளவு நன்மைகளா….

nathan