42e032d4 f2c5 427e a857 99749b17a132 S secvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி

இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும் குளிர் சாதன வீடுகளும் தான். மனிதன் தற்காலிகத் தப்பித்தளுக்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான். இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல்களையும் பெற்றுத் தருகின்றது என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம்முடைய உடல் சுற்றுப்புற வெப்பத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது.

ஆனால் குளிர் அறைகளில் இருக்கும்போது செயற்கையான சமநிலை கிடைத்துவிடுவதால் உடலின் செயல்பாடு தேவையற்றதாகி விடுகிறது.உடல் தன்னுடைய இந்த செயலை பயன்படுத்தாத போது சேமிக்கப்படும் சக்தி கொழுப்பாக மாறி உடலில் தேங்குகிறது. கடைசியில் இது உடல் பருமனுக்கு வழிசெய்து விடுகிறது. குளிர் சாதன அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்னொரு பெரிய சிக்கல் இருக்கிறது. மனித உடல் அறைகளிலுள்ள குளிர் காலநிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு அதிக நேரம் அங்கேயே செலவிடுகிறது.

இதனால் வெளியிலுள்ள வெப்பத்தைத் தாங்கும் திறன் உடலுக்குக் குறைகிறது. குளிர் அறைகளை விட்டு நிஜத்தின் வீதிகளுக்கு வரும்போது வெப்ப அலைகள் குளிர் நிலையிலுள்ள உடலை அதிகமாய் பாதித்து விடுகின்றன. இதனால் தான் குளிர் அறைகளில் இருப்பவர்கள் வெளியே வந்ததும் பதறி ஓடுகிறார்கள்.

குளிர் சாதனம் நம்மை எப்போதுமே இரண்டு விதமான காலநிலைகளில் வாழச்செய்கிறது. குளிர் அறையிலிருந்து வெளியே வருவதும், பிறகு உள்ளே செல்வதும் என வாழ்க்கை ஓடும் போது உடல் அதற்குரிய மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டியிருப்பதால் பல நோய்களைக் கொண்டு வந்து விடுகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் அதிக நேரம் குளிர்சாதனக் கருவிகள் ஓடும்போது ஒரே காற்றை திரும்பத் திரும்ப சுழற்சியாய் பயன்படுத்துவதால் காற்றில் இருக்கும் மாசு வெளியே எங்கும் செல்லாமல் சுவாசத்தில் கலந்து விடுகிறது.

இது தொற்று நோய்க் கிருமிகள் யாராவது ஒருவரிடம் இருந்தாலே அந்த அறையிலுள்ள அனைவரை யும் விரைவில் பற்றிக் கொள்கிறது. சிக் பில்டிங் சிண்ட்ரோம் (SBC) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நோய் களுக்கு குளிர்சாதனமும் ஒருமுக்கிய காரணம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தலைவலி, சிறு மயக்கம், சைனஸ், கண் எரிச்சல், கண்ணில் கண்ணீர் வழிதல், தொண்ட பிரச்சனைகள் என பல அறிகுறிகளைக் கொண்டது தான் இந்த சிக் பில்டிங் சிண்ட்ரோம். குளிர் சாதனப் பெட்டிகள் ஈரப்பதமுள்ள காற்றை உலரவைத்துக் குளிர வைத்து அனுப்புகிறது. இந்த மாற்றம் அலர்ஜி நோய் உள்ளவர்களை பெருமளவில் பாதிக்கும் என்கிறார் சர்வதேச மருத்துவர்கள்.
42e032d4 f2c5 427e a857 99749b17a132 S secvpf

Related posts

வயதான தோற்றத்திலிருந்தும் விடுபடல ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி!…

nathan

நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி… நாமக்கட்டியின் நன்மைகள்..

nathan

உடலின் வெப்பத்தை தணிக்கும் தேநீர் வகைகள்!…..

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

உங்களுக்கு தெரியுமா இதயநோய் குணமாகவும், இதயம் வலுப்பெறவும் சில வழிமுறைகள்.

nathan

வியர்வை நாற்றம் நீங்கிட..!

nathan

இந்த ராசிக்காரங்களால தோல்வியை தாங்கிக்கவே முடியாதாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா காலிபிளவரில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது..?

nathan

வைட்டமின் சி தரும் ஆரோக்கிய நலன்

nathan