ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…பாத மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பாத மசாஜ் செயும் போது நம் உடல் புத்துணர்வு அடைகிறது. மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் தூண்டப்படும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டமும் மேம்படும்.

தசைகளும் நெகிழும். பதற்றம் குறையும். உடல் வலியும் நீங்கும். பாதங்களில் சரியான புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யும்போது இதயம், நுரையீரல் பலப்படும்.

கழுத்து வலி, சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்தற்போது பாத மசாஜால் கிடைக்கும் நன்மைகள் பார்போம். பாதங்களில் மசாஜ் செய்யும் போது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதனால் உடல் புத்துணர்வடையும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்ததை சரிசெய்ய காலின் கட்டை விரலை அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். கால் விரல்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் தலைவலி குறைவதை உணர்வீர்கள்.

கால்களில் எண்ணற்ற நரம்பு முடிச்சுகள் உள்ளன. அவை முதுகுத்தண்டுவடத்துடன் தொடர்புடையவை. வட்ட இயக்கத்தில் விரல்களை அழுத்தி தேய்த்து 30-45 விநாடிகள் பாதத்தில் மசாஜ் செய்தால், முதுகு தண்டுவடத்தில் புத்துணர்ச்சி பரவும்.

சோம்பல், தசை பலவீனம், உற்சாகமின்மையால் அவதிப்படுகிறவர்கள் பாத மசாஜ் செய்தால் உற்சாகத்துடன் செயல்படலாம். கழுத்து மற்றும் தோள்களில் ஏற்படும் வலி, தலையின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் ஏற்படும் வலிகளை போக்கவும் பாத மசாஜ் துணைபுரியும். கால் விரல்களின் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…இந்த ராசிக்காரர்கள் எளிதில் கள்ள உறவில் ஈடுபடுவார்களாம்.. உங்க கணவன் அல்லது மனைவி ராசி இதுல இருக்கா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்டியவைகள்!!!

nathan

இனியும் செய்யாதீர்கள்! திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு..

nathan

நீங்களே காலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா?

nathan

தெரியுமா உங்களுக்கு மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது?

nathan

ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

ஆண்கள் கவனத்திற்கு.. இந்த தப்பை செய்துவிடாதீர்கள்..

nathan

உங்களுக்கு தொியுமா ? நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் இந்த 4 பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்!

nathan

கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் விரிவாக அறிந்து கொள்ளலாம்

nathan