25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
kidney stone
ஆரோக்கிய உணவு

சிறுநீரகம் நன்றாக செயல்பட சிறந்த உணவு முறை எது தெரியுமா?

கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில் முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன.

ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். வீட்டுக்குக் கழிவறை எப்படி முக்கியமோ அதுமாதிரி நம் உடலுக்குச் சிறுநீரகம் முக்கியம்.

சிறுநீரகம் நமது பல்வேறு செயல்களால் பாதிப்பை சந்திக்கிறது. எவ்வளவு வயதானாலும் சிறுநீரகத்தில் கோளாறு வராமல் பார்த்து கொள்ள கீழே கூறப்பட்டுள்ள விடயங்களை பின்பற்றினால் போதும்.

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

சிறுநீரகம் விடயத்தில் உணவு முறைக்கு பெரிய பங்கு இருக்கிறது.

உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லேட், பிஸ்கட், ‘ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். புகை பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது.

தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

Related posts

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு

nathan

ரத்த சோகை இருக்கா? சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

nathan

வல்லாரை கீரையில் உள்ள வல்லமை இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

nathan

பருத்தி பால் தீமைகள்

nathan

ஏலக்காய் – தேங்காய்ப் பால்

nathan

எச்சரிக்கை! இதெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாதா..?

nathan

அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்

nathan

நெய்மீன் கருவாடு தொக்கு

nathan

சூப்பர் டிப்ஸ்! 6 பாதாம் மட்டும் தினமும் சாப்பிடுங்க..! அப்புறம் பாருங்க..

nathan