soup2
ஆரோக்கிய உணவு

சுவையான கேழ்வரகு வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 2 டீஸ்பூன்

கேரட், கோஸ், பீன்ஸ், பருப்பு – 1 கப்
உப்பு – சுவைக்கு
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை :

காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைபோட்டு வேக வைக்கவும்.

கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கவும்.

இதை காலையில் உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். உடலுக்கும் மிகவும் நல்லது. சற்று தண்ணீராக இருந்தால் தான் இது நன்றாக இருக்கும்.

சூப்பரான சத்தான கேழ்வரகு வெஜிடபிள் சூப் ரெடி.

Related posts

அரிசி உணவுக்கும் உருளைக்கும் ஒத்துவராது!

nathan

ப்ளூ டீ பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

பழைய சோறு சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா?

nathan

மாங்காய் கருப்பட்டி ஜூஸ்

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பூஞ்சை படிந்த பிரட் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழம்!…

nathan

உடல் எடையை குறைப்பதற்கு முதலில் தேவை ஆரோக்கியமான உணவு முறையாகும். உடல் எடையை குறைக்க இப்போது அதிக பிரபலமாகி வரும் ஒரு முறை பச்சை காய்கறிகள் ஜூஸாகும்.

nathan

காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகி விடுவோம்! தேன் சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுவோம் அலசுவோம்… வாருங்கள்…..

nathan