28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 612f05
ஆரோக்கியம் குறிப்புகள்

மூங்கில் தாவர தண்டு சாப்பிட்டால் எடை குறையுமா?

மூங்கில் தாவரத்தில் இருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகள் மூங்கில் குருத்து, மூங்குறுத்து என்று அழைக்கப்படுகிறது.

மூங்கில் தாவரத்திலிருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகள் உண்ணக்கூடியவை என்பது ஆச்சரியமாக இருக்கலாம். உண்மையில் இவை ஆரோக்கியம் மிக்கவை.

அஸ்பாரகஸ் போன்று மென்மையானது. இது சீனா, தைவான், தென்கிழக்கு நாடுகளில் பருவகால சுவையான ரெசிபியாக உள்ளது. இவை தரும் அளவற்ற மருத்துவ நன்மைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

​எடை இழப்புக்கு உதவலாம்

உடல் பருமன் மற்றும் அதிக எடையின் தாக்கம் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த மூங்கில் குருத்து உதவும்.

ஆய்வு ஒன்றின்படி மூங்கில் தளிர்கள் அதிக கொழுப்புள்ள உணவு உடல் பருமனை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மூங்கில் தண்டு நார்ச்சத்து உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கும் ஆற்றலை கொண்டிருக்கலாம் என்று ஆய்வு சுட்டிகாட்டுகிறது.​

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்

சில ஆராய்ச்சியின் படி மூங்கில் தளிர்களில் காணப்படும் பைட்டோஸ்டெரால்ஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உடலில் தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பை கரைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். இது தமனிகளில் இருந்து கொழுப்பை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் இரத்தத்தின் இயக்கம் எளிதாக உதவுகிறது.​

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த செய்யும்

மூங்கில் தளிர்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும். இதில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நரம்பியல் கடத்தல் நோயை தாமதப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருந்தாலும் உடலை உள்ளிருந்து வலுப்படுத்துகிறது.​

மலச்சிக்கலை சரி செய்யலாம்
மூங்கில் குருத்து நார்ச்சத்து கொண்டவை. இது வயிற்றுப்போக்குக்கு நல்லது. இது வயிற்று கோளாறுகளை சரி செய்யவும் உதவும். இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக மேன்மைப்படுத்த செய்யும்.

மலச்சிக்கல் தீவிரமாக இருக்கும் போது அவை மூலம் வரை கொண்டு சென்று விடும். அதை தடுக்க மூங்கில் குறுத்து உங்களுக்கு உதவலாம்.

​சுவாச கோளாறுகளுக்கு தீர்வாக இருக்கலாம்

சுவாச கோளாறுகளுக்கு எதிராக மூங்கில் குருத்து செயல்படுவதாக சொல்லப்படுகிறது, மூங்கில் குருத்து தேனுடன் கலந்து கஷாயமாக்கி கொடுக்கலாம். இது நுண்ணுயிர் கொல்லி என்பதால் அலர்ஜி எதிர்ப்பு பண்பு, ஆன்டி பயாடிக் இருப்பதால் இது காய்ச்சலை குணப்படுத்துகிறது.

Related posts

என்ன நடக்கும் தெரியுமா? காதலன் அல்லது கணவனின் ஆடைகளை உங்களின் காதலி அணிந்தால்

nathan

உங்க குழந்தை ‘W’ வடிவில் உட்கார்றாங்களா?? பழக்கத்தை நிறுத்துங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… குழந்தைகள் விளையாடும் போது அவர்களை கவனிக்கிறீங்களா? கவனிக்க வேண்டிய விஷயம் என்ன ?

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளை உயரமாக்கும் உணவுகள் இது தான்!

nathan

இத படிங்க உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..! எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்கிறீர்களா.?!

nathan

மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா பிளாஸ்டிக் பாட்டில்? அதிர்ச்சி தகவல்!!!

nathan

மன பயம் நீங்கி தைரியம் உண்டாக

nathan

ரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி?

nathan

வெண்மையான பற்கள் கிடைக்க நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டியவை !!

nathan