28.5 C
Chennai
Monday, Nov 18, 2024
unnamed
ஆரோக்கிய உணவு

ஆண்களே உஷார்! மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து!

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
உணவில் மிளகை அதிகமாக சேர்த்தால், இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, நுரையீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகமாக மிளகு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் மிளகை அதிகம் சேர்த்து சாப்பிட்டால், சுவாச பிரச்சனை, தொண்டையில் எரிச்சல், ஆஸ்துமா போன்ற இதர சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் மிளகுத் தூளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கு சரும வறட்சியை அதிகரித்து, தோல் உரிதல் போன்ற பல்வேறு சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் மிளகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதுடன், சிலநேரத்தில் அது கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தும்.
பைபரின் ஆண்களின் பாலியல் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதன் மூலக்கூறுகள் ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது ஆண்களின் விந்தணுக்களை சேமித்து வைக்கும் குழாயான எபிடிடமிஸிலில் அதிக நச்சுப்பொருட்கள் சேர காரணமாகிறது.
கருப்பு மிளகு சில மருந்துகளை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.கல்லீரல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடும் ஆண்டிஹிஸ்டமின்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பைபரின் மருந்துகள் உறிஞ்சுவதை மேம்படுத்தும் வேலையே செய்கிறது. மருந்து குறைவாக உறிஞ்சப்படும்போது இது நன்மை பயக்கும் என்றாலும் சில மருந்துகளை அதிகமாக உறிஞ்சுவது ஆபத்துக்கு வழிவகுக்கும்.

Related posts

கல்லூரிப் பெண்கள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை என்ன சாப்பிடலாம்?

nathan

சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? அப்ப இத படிங்க ……

nathan

பி.பி, சுகர்னு அத்தனையையும் விரட்டி “குட்பை“ சொல்லும் அதிசய பழம்!

nathan

உடல் நலனை பேணும் காய்கறிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இரவு 9 மணிக்கு பின் உணவு உண்டால் என்னவாகும் தெரியுமா?

nathan

சுவையான புடலங்காய் பஜ்ஜி

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்க இந்த இரண்டு பொருட்களே போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…டீ ஆறிடுச்சுனா மறுடிபயும் சூடு பண்ணக் கூடாது!

nathan

சுவையான சத்தான கம்பு லஸ்ஸி

nathan