கடுகு விதைகளில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது.
இந்திய உணவுகளில் கடுகு விதைகளை அதிகமாக பயன்படுத்துவது உண்டு.
இந்த சிறிய கடுகு விதைகள் முதலில் ஐரோப்பாவின் மிதமான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. பிற வட ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளிலும் பிரபலமாகி விட்டது. கடுகு விதைகளை தவறாது உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நாம் பெற முடியும்.
கடுகின் நன்மைகள்
கடுகு விதைகளில் குளுக்கோசினோலேட்ஸ் மற்றும் மைரோசினேஸ் போன்ற கலவைகள் நிரம்பியுள்ளன. இது உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
ஜர்னல் ஹியூமன் & எக்ஸ்பெரிமெண்டல் டாக்ஸிகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சிறிய கடுகு விதைகள் வேதியியல் தடுப்பு ஆற்றலைக் கொண்டு இருப்பதாக கூறுகிறது.
இது புற்றுநோய்களின் விளைவுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெற கடுகு விதைகள் உதவுகிறது.
கடுகு விதைகளில் மெக்னீசியம் அதிகளவு காணப்படுகிறது. இது நமது நரம்பு மண்டலத்தை ஆற்றுகிறது. நம் உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வலி மற்றும் அழுத்தத்தை போக்க உதவுகிறது.
கடுகு விதைகள் உங்க செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாகும். அஜீரணப் பிரச்சனை இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட கடுகு விதைகள் உதவுகின்றன.
இந்த கடுகு விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது குடல் இயக்கத்திற்கும், உடலில் செரிமான சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இதய நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு கடுகை உணவில் சேர்த்து வருவது நல்லது.
இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து கொழுப்பளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கடுகு விதைகள் எலும்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாக்குகிறது. இதில் எலும்புகளை வலிமையாக கும் செலினியம் உள்ளது. இந்த செலினியம் சத்து நகங்கள், முடி மற்றும் வலுப்படுத்த உதவுகிறது.
கடுகு விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஈறுகள், எலும்புகள் மற்றும் பற்களின் வலியைப் போக்க உதவுகிறது.
கடுகு விதைகள் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டி சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்குகிறது.
சருமத்தில் முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும அழற்சியை குறைக்கிறது.