potato curd gravy
சமையல் குறிப்புகள்

சூப்பரான உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

உருளைக்கிழங்கை கொண்டு பலவாறு சமைக்கலாம். இங்கு அவற்றில் உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். மேலும் இந்த ரெசிபியானது மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த ரெசிபியை கிரேவியாகவும் செய்யலாம், வறுவலாகவும் செய்யலாம்.

அனைத்தும் விருப்பத்தைப் பொறுத்ததே. சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தயிர் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Potato Curd Gravy
தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 10-12 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1/2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதில் உருளைக்கிழங்கில் ஒரு ஓட்டை போட்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி!!!

Related posts

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா?

nathan

பீர்க்கங்காய் கிரேவி

nathan

சுவையான… தக்காளி சாம்பார்

nathan

பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

nathan

சுவையான மசாலா பாஸ்தா

nathan

சப்பாத்தி லட்டு

nathan

இறால் கிரேவி

nathan

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை..

sangika

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika