காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக நோய்கள் எதுவும் இல்லாமல் இருக்கும். அதிலும் கீரைகளை சேர்த்து வந்தால், உடல் வலிமையுடன் இருக்கும். இங்கு கீரைகளில் ஒன்றான பசலைக்கீரையை, உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயுடன் சேர்த்து எப்படி வறுவல் செய்வதென்று கொடுத்துள்ளோம்.
மேலும் இது மிகவும் ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த பசலைக்கீரை உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் வறுவலின் செய்முறையைப் பார்ப்போம்.
Spinach Potato and Brinjal Curry
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை – 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
கத்திரிக்காய் – 2-3 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து நறுக்கியது)
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2-3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை மற்றும் பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பசலைக்கீரை உருளைக்கிழங்கு கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!