27.1 C
Chennai
Saturday, May 24, 2025
03 channa rice upma
ஆரோக்கிய உணவு

சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா

காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை செய்யுங்கள்.

இந்த ரெசிபியை செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1 கப்

புழுங்கல் அரிசி – 1 கப்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

வரமிளகாய் – 3

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இட்லி தட்டில் அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

பிறகு அந்த இட்லியை ஒரு தட்டில் உதிர்த்துவிட்டுக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சீரகப் பொடியைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா ரெடி!!!

Related posts

தயிரின் அற்புதங்கள்

nathan

weight loss drink in tamil – நீங்க உடல் எடை குறைக்க விரும்புறீங்களா?

nathan

உடல் நலனை பேணும் காய்கறிகள்

nathan

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

nathan

ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் ஆபத்தா! தெரிந்துகொள்வோமா?

nathan

தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

nathan

ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

nathan