24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.0.560.350.160.300.053.8 3
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…பால் குடிப்பதனால் தீமைகள் ஏற்படுமா?

பால் என்பது நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் அத்தியாவசியமான பொருள் என்றாலும், பால் ஏற்படுத்தும் பல பக்கவிளைவுகள் குறித்து காண்போம்.

பொதுவாக பால் எலும்புகளுக்கு வலுகொடுக்கும் என்று கூறப்படுகிறது. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தினாலும், அதிகளவு பால் குடிப்பதனால் எலும்புகள் முறிவடையும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் அதிகளவு பால் குடிப்பதனால் எலும்பு முறிவு உட்பட, இதய கோளாறுகள், வயதானவர்களுக்கு புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், தினமும் அதிகளவு பால் குடிக்கும் பழக்கமுடைய நடுத்தர வயதினருக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 15 சதவிதம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

 

பெண்களுக்கு பாதிப்பு

பெண்கள் அதிகளவு சீஸ் மற்றும் தயிர் சாப்பிடும்போது, இறப்பு விகிதத்தை அதிகரிப்பதுடன் எலும்பு முறிவும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது பாலால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட 12 சதவித அதிகமாகும்.

கால்சியத்தால் ஏற்படும் பிரச்சனை

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம். இது பாலில் அதிகம் இருந்தாலும், இது மட்டுமே எலும்புகளை பலப்படுத்தாது. ஏனெனில், கால்சியத்தை தவிர பல ஊட்டச்சத்துக்களும் தேவை.

மாற்று வழியில் எடுத்துக்கொள்ளுதல்

பால் சார்ந்த பொருட்கள் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தும். குறிப்பாக, தயிர் மற்றும் சீஸ் போன்ற பொருட்கள் ஆரோக்கியத்திற்கு உதவும்.

எனவே, தினமும் மூன்று தம்ளர்கள் பால் குடிப்பதை விட, ஒரு கப் தயிர் அல்லது சீஸ் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். இவற்றில் பாலை விட அதிக சத்துக்கள் உள்ளன.

 

பாலை தவிர்த்தல்

பாலை தவிர்க்க நினைத்தால் அதற்கு மாற்றாக கால்சியம் நிறைந்த சோயா, பட்டாணிகள், கீரைகள், ப்ரோக்கோலி, பாதாம், பீன்ஸ் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் சோயா பால் அல்லது பாதாம் பாலை அருந்தலாம்.

 

காய்கறிகள்

பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் கால்சியம் ஆகியவை காய்கறிகள் மற்றும் பழங்கள், தானியங்கள், புரத உணவுகளில் உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தும் என்பதால் இவற்றை பாலுக்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.

Related posts

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

nathan

பருப்பு கீரை சாம்பார்

nathan

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்..!!

nathan

தேனை எப்படி சாப்பிடக்கூடாது

nathan

இந்த ஒரு பழம் சாப்பிடுங்க தைராய்டு உங்களுக்கு வராது தெரிந்து கொள்ளுங்கள்..!சூப்பர் டிப்ஸ்

nathan

உடலுக்கு வலுசேர்த்து ஆரோக்கியம் காக்கும் பயறுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பலரும் கேள்விப்பட்டிராத ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய பழங்களின் தோல்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ் இரவில் ஊற வையுங்கள்! மறுநாள் சாப்பிடுங்கள்!

nathan

இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan