29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கிய உணவு

காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

காரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு.

ஆனால், காரமான உணவு சாப்பிடுவதால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதய நலனில் இருந்து புற்றுநோய் கட்டி வளராமல் பாதுகாக்கும் வரை பல நன்மைகளை தருகிறது காரமான உணவுகள்.

இனி, காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்….

உடல் எடை குறையும் காரமான உணவினை சாப்பிடுவதால் உடல் எடை குறையுமாம். இதற்கு மிளகாய் தூள் பயன்படுத்தக் கூடாது, பச்சை மிளகாய், மிளகு, மஞ்சள் தான் பயன்படுத்த வேண்டும். காரமான உணவு உடலில் உள்ள கலோரிகளை வேகமாக கரைக்க உதவுகிறது என்பதே இதற்கான காரணம்.

இதய நலன் காரமான உணவு சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை விரைவாக குறைக்க முடியும். உடலில் கொழுப்புச்சத்து குறைவதால் மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். முக்கியமாக இதய குழாய்களில் கொழுப்பு சேர முடியாது காக்க முடியும்.

புற்றுநோயை தடுக்கும் சில கார உணவுகளில் புற்றுநோய் கட்டிகளை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. மஞ்சள், மிளகு போன்ற இந்திய மசாலா உணவுகள் இந்த வகையில் சிறந்த பலன் தருகிறது. புரோஸ்டேட் புற்றுக் கட்டி வளராமல் தடுக்க இந்த உணவுகள் சிறந்த முறையில் பலன் தருகிறது.

குறைந்த இரத்த அழுத்தம் வைட்டமின் ஏ மற்றும் சி இதய தசை வால்களை வலிவாக்க உதவுகிறது. மிளகு போன்ற கார உணவின் சூடு, இரத்த ஓட்டம் உடல் முழுதும் சீரான முறையில் இயங்க உதவுகிறது. இவையெல்லாம் இதய வலுவினை அதிகரிப்பதோடு, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

சத்துகள் கார உணவுகளில் வைட்டமின் ஏ, சி, பி 6, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன.

சமீபத்திய ஆய்வு சமீபத்திய ஆய்வு ஒன்றில், காரமான உணவை சாப்பிடுபவர்கள் தான் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர் என கண்டறிந்துள்ளனர்.

எச்சரிக்கை
அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். அளவுக்கு அதிகமாக காரத்தை உணவில் சேர்த்துக் கொள்வது வாய்ப்புண், அல்சர் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…இரத்த அழுத்த குறைவு உள்ளவர்களுக்கான சிறப்பான சில உணவுகள்!!!

nathan

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகள் பேரீட்சை சாப்பிடலாமா?

nathan

சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்

nathan

உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடிய பேரீச்சை !….

sangika

இதோ தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா? முயன்று பாருங்கள்..

nathan

பொரி சாப்பிட்டா இவ்வளவு பலன் இருக்கா?

nathan

40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி? தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பரான பட்டர் சிக்கன் ரெசிபி

nathan