40 C
Chennai
Wednesday, May 29, 2024
09
மருத்துவ குறிப்பு

பெண்களே ஆண் குழந்தை வேண்டுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்….

குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் அக்காலத்தில் தான் ஆண் குழந்தை வேண்டுமென்று பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப் பால் கொடுத்து கொன்றுவிடுவார்கள். ஆனால் குழந்தை பிறப்பதே கடினமாக உள்ள தற்போதைய மார்டன் காலத்திலும் சிலர் ஆண் குழந்தை தான் வேண்டுமென்று நினைக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், பெண் குழந்தையை பெற்றெடுத்தால் நிறைய செலவு ஆகும். அதுவே ஆண் குழந்தை என்றால் வருமானம் என்று நினைப்பது தான். மேலும் எவ்வளவு தான் மார்டன் காலமாக மாறினாலும், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதித்து பார்க்க நமது அரசு தடை செய்துள்ளது.

எனவே பலர் ஆண் குழந்தை பிறப்பதற்கு என்ன வழியெல்லாம் உள்ளதோ அவற்றையெல்லாம் முயற்சிக்கின்றனர். இங்கு ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவி புரியும் ஒருசில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. இது ஒன்றும் நம் முன்னோர்களின் மூடநம்பிக்கைகளுள் ஒன்றாக இல்லாவிட்டாலும், ஒருசில அறிவியல் காரணங்களால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது.

சரி, இப்போது ஆண் குழந்தை பிறக்க உதவியாக இருக்கும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அதனை உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பொட்டாசியமானது கருப்பையினுள் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும். எனவே ஆண் குழந்தை வேண்டுமென்பவர்கள், ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்தை உட்கொண்டு வருவது நல்லது.

காலை உணவாக செரில்

ஆண் சிசு உருவாக அதிக அளவு ஊட்டச்சத்தானது தேவைப்படுவதால், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த செரிலை காலை உணவாக எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

காளான்

நல்ல ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். அத்தகைய வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக அளவில் காளானில் இருப்பதால், இதனை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் ஆண் சிசுவானது நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளவர்களுக்குத் தான் பிறக்கும்.

ஸ்டார்ச் நிறைந்த உணவுகள்

குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

கடல் உணவுகள்

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ஆண்களின் விந்தணுக்களானது எவ்வளவு அதிகமாக கருப்பையினுள் நுழைகிறதோ அதைப் பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஜிங்க் நிறைந்த கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

உப்புள்ள உணவுகள்

சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கூட ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே கருத்தரிக்கும் முன் சோடியம் நிறைந்த உப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்து வாருங்கள். முக்கியமாக கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.

தக்காளி

தக்காளியிலும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சரியான அளவில் நிறைந்துள்ளது. மேலும் அத்துடன் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் அவை உடலில் உள்ள pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

Related posts

உடம்பு எடையை நீங்க குறைக்கணுமா? இந்தத் தவறுகளை செய்யாதீங்க!!

nathan

நீங்கள் முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்னாகும்?தெரியுமா ?

nathan

ஹார்ட் அட்டாக் vs கார்டியாக் அரெஸ்ட்

nathan

குழந்தைகள் சரியாக தூங்கவில்லையென்றால் சந்திக்கும் பிரச்சனை என்ன?

nathan

இவை வெறும் வலியென நினைத்து வீட்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் – அபாயமாக மாறலாம்!!

nathan

முதலிரவன்று பெண்களின் மனதில் தோன்றும் வேடிக்கையான எண்ணங்கள்

nathan

அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்

nathan

ஆண்களை விட பெண்களின் மூளைக்கு சக்தி அதிகம் : உங்களுக்குத் தெரியுமா?

nathan

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட் -தெரிஞ்சிக்கங்க…

nathan