மருத்துவ குறிப்பு

உடம்பு எடையை நீங்க குறைக்கணுமா? இந்தத் தவறுகளை செய்யாதீங்க!!

‘ஒபிசிட்டி’ எனப்படும் உடல் பருமன் பிரச்சனை இந்தக் காலத்தில் சர்வ சாதாரணம். ஜங்க் ஃபுட் எனப்படும் கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிடுவது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

இப்படி நன்றாக உடல் எடையை ஏற்றிவிட்டு, பின் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளமோ, ஏராளம்! இவர்களில் பலர், எடையைக் குறைப்பதற்கான எந்தவித முயற்சிகளிலும் ஈடுபடாமல் சோம்பலாக இருந்து விடுவார்கள். எடையும் ஏறிக் கொண்டே இருக்கும்.

 

மற்றவர்கள் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று முழு ஈடுபாட்டுடன் உடல் எடைக் குறைப்பில் அக்கறை கொண்டிருப்பார்கள். ஆனால், அப்போது ஓவராக உணர்ச்சிவசப்பட்டு செய்யக்கூடாத சில தவறுகளை அவர்களையும் அறியாமல் செய்து விடுவார்கள். இதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடும்; அல்லது, உடல் எடை மீண்டும் ஏறத் தொடங்கும்.

எடைக் குறைப்பின் போது நம்மவர்கள் செய்யும் சில தவறுகள் குறித்துப் பார்க்கலாமா?

விரைவில் உடல் எடையில் மாற்றம் வேண்டுமா? உணவில் தேன் மற்றும் பட்டையை சேத்துக்கோங்க…

அதிக புரோட்டீன்

உடல் எடைக் குறைப்பிற்கு புரதம் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக புரதச்சத்தை ஏற்றிக் கொள்ளும் போது, வேறு சில விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. அளவுக்கு அதிகமான புரதம் நம் உடம்பில் கொழுப்பாகத் தான் தேங்கி நிற்கும். எனவே, எடைக் குறைப்பில் ஈடுபடும் போது இதை மனதில் கொள்வது அவசியம்.

 

குறைவான காலை உணவு

எடையைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு, காலை உணவை சிலர் குறைத்து விடுவார்கள். இன்னும் சிலர், காலை உணவையே தவிர்த்து விடுவார்கள். இவை இரண்டுமே தவறு. இதனால் உடலின் மெட்டபாலிசம் நன்றாகக் குறைந்துவிடும். ஆகவே காலையில் அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த உணவுகளை சாப்பிட்டீ ங்கனா… நிம்மதியான தூக்கத்தை பெறலாமாம்..! இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த உணவுகளை சாப்பிட்டீ ங்கனா… நிம்மதியான தூக்கத்தை பெறலாமாம்..!

காய்கறிகளைத் தவிர்த்தல்

உடல் எடையைக் குறைக்கவுள்ள சிலர், காய்கறிகளின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை. எடைக் குறைப்பின் போது, காய்கறிகள் தான் நம் உடலில் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பல காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், எடைக் குறைப்பிற்கு அவை பெரிதும் உதவுகின்றன.

 

ப்ளான் மிஸ்ஸிங்

எடைக் குறைப்பில் ஈடுபடும் போது, பக்காவான ஒரு ப்ளானைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக என்னென்ன செய்கிறோம், என்னென்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம், குறிப்பிட்ட இடைவெளியில் எவ்வளவு எடை குறைந்தது என்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் தினமும் ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்வது நலம்.

சரியாகத் தூங்குவதில்லை

ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாக ஒரு நாளுக்குக் குறைந்தது ஆறு மணிநேரம் தூங்கியே ஆக வேண்டும். தலை முதல் காலை வரை அனைத்து உறுப்புகளுக்கும் இந்த ஆறு மணிநேர ஓய்வு என்பது அவசியம். இதைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால், உடல் எடைக் குறைப்பிற்கான பல விஷயங்கள் அடிபடும்.

ஓவர் குடி

அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டிருப்போரைக் கடுமையாகப் பாதிக்கும். உடலின் மெட்டபாலிசமும் மோசமாகப் பாதிக்கப்படும்.

போதுமான நேரம் ஒதுக்காதது

உடல் எடையைக் குறைப்பது என்பது ஓரிரு நாட்களிலோ வாரங்களிலோ நிச்சயம் சாத்தியமில்லை. நம் முயற்சிகளைக் கைவிட்டு விடாமல் பல மாதங்களுக்கு இதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியம்.

அரைத்த மாவையே அரைத்தல்

எடைக் குறைப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தினமும் ஒரே விதமான விஷயங்களையே செய்தால் உங்கள் எடையும் அப்படியே தான் இருக்கும். இதில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, புதிய விஷயங்களில் ஈடுபட வேண்டும்.

பயிற்சிகளை அசட்டை செய்தல்

உடல் எடை குறைவதற்கான பயிற்சிகளைத் தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தான் சரியான ரிசல்ட் கிடைக்கும்; விரைவிலேயே கிடைக்கும்.

நீர் சரியாகக் குடிப்பதில்லை

எடைக் குறைப்பின் போது, உடலுக்குத் தேவையான அளவு நீரைக் குடிக்காமலிருந்தால், உடலின் நீர்ச்சத்து குறைவதோடு மெட்டபாலிசத்தின் அளவுகளும் மோசமாகப் பாதிப்படையும். குறைந்தது மூன்று லிட்டர் நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button