25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 1537
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது ஆபத்தானதா?

முக்கனிகளில் ஒன்று வாழை. உலகின் விலைகுறைவான அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று வாழைப்பழம். பலரும் விரும்பி சாப்பிடும் வாழைப்பழம் நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. வருடம் முழுவதும் கிடைக்கும் வாழைப்பழத்தை எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

 

பல காலமாக அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் வாழைபழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்பதுதான்? நம்மில் பலருக்கும் இரவு சாப்பிட்டவுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் சிலர் இதனை ஆரோக்கிய கேடு என்கிறார்கள். இதில் எது உண்மை என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?

ஆயுர்வேதம் என்ன கூறுகிறது என்றால் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது ஆபத்தானது அல்ல. ஆனால் இதனால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடும்போது உங்களுக்கு சளி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதேபோல இது செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன் உங்களை சோம்பலாகவும் உணரச்செய்யும்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது

இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும்போது சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவரும் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களுக்கு அதிக பயனை அளிக்கும்.

அமிலத்தன்மையை குறைக்கிறது

ஆய்வுகளின் படி இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது சாலையோர உணவு மற்றும் அதிக காரமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நல்லதென கூறப்படுகிறது. காரமான உணவு சாப்பிட்டபின் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அந்த உணவுகளால் ஏற்படும் அமிலத்தன்மையை குறைப்பதுடன் அல்சர் உருவாவதையும் தடுக்கிறது.

மெலடோனின்

மெலடோனின் என்பது இரவு நேரத்தில் சுரக்கும் ஒரு ஹார்மோனாகும். இது இரவு நேரங்களில் அதிகமாகவும், காலை நேரத்தில் குறைவாகவும் சுரக்கும். சீரான அளவு மெலடோனின் சுரப்பது நிம்மதியான தூக்கத்திற்கு முக்கியமானதாகும். வாழைப்பழத்தில் இயற்கையாகவே மெலடோனின் ஹார்மோன் சுரப்பை தூண்டும் பண்பு உள்ளது. இது தூக்கத்திற்கும், சரியான நேரத்தில் எழுவதற்கு அவசியாயமானதாகும்.

 

தூக்கம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நாள் முழுவதும் வேலை செய்ததால் ஏற்படும் களைப்பை குறைத்து தசைகளை நெகிழ்வடைய உதவுகிறது. மாலை நேரத்தில் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கும். ஒரு பெரிய வாழைப்பழத்தில் 487மிகி பொட்டாசியம உள்ளது. இது பெரியவர்களுக்கு தேவையான பொட்டாசியத்தில் 10 சதவீதம் ஆகும்.

சர்க்கரை அளவு

மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வாழைப்பழத்தில் மிகக்குறைந்த அளவே சர்க்கரை உள்ளது. இரவு உணவு என்பது அன்றைய நாளின் முடிவுக்கு மட்டுமின்றி அடுத்த நாளின் சுறுசுறுப்பான தொடக்கத்திற்கும் அவசியமானது. எனவே இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. எனவே அடுத்தநாள் காலை சுறுசுறுப்பாகவே தொடங்குவீர்கள்.

எடையை அதிகரிக்காது

ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகளே உள்ளது. ஒருவேளை நீங்கள் 500 கலோரிகளுக்கு குறைவாக உள்ள இரவு உணவை சாப்பிட விரும்பினால் இரண்டு வாழைப்பழங்களும் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலும் அதற்கு மிகசிறந்த தேர்வாக இருக்கும்.

பசியை கட்டுப்படுத்துகிறது

ஒருவேளை இரவு நேரங்களில் உங்களுக்கு பசித்தால் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை விட ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் மற்ற நொறுக்குதீனிகளில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கும். இவை உங்கள் இரவு நேர உறக்கத்தை கெடுக்கக்கூடிய ஒன்றாகும். இனிப்பான இந்த வாழைப்பழம் உங்கள் பசியை விரட்டக்கூடிய ஒன்று, அதேசமயம் வைட்டமின்களும், நார்சத்துக்களும் நிறைந்த ஒரு பழமாகும்.

 

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

மொத்தத்தில் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதுதான். ஆனால் அது அனைவருக்கும் அல்ல. ஏனெனில் வாழைப்பழத்தில் லேடக்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Related posts

நீங்கள் இரண்டு கிளாஸுக்கு அதிகமா டீ குடிக்கிறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!!

nathan

ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகளை பச்சையா சாப்பிடுங்க…

nathan

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கொண்டைக்கடலை சாப்பிடலாமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan

நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மல்கோவா மாம்பழம்

nathan

வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி – மூன்றில் எது நல்லது??

nathan

தெரிஞ்சிக்கங்க… நட்சத்திரப் பழமும், நன்மைகளும்…

nathan

இந்த ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மற்றம் என்ன எனத் தெரியுமா ?

nathan

நீரிழிவு நோயியை கட்டுபடுத்த முக்கிய பங்காற்றும் காய்கறிகள்!!

nathan