25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
15 151
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…மிக அதிக சர்க்கரையுள்ள இந்த உணவுகளையெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுடுங்க!!

மிகவும் இளமையாக இருப்பவர்களும் நீண்ட ஆயுளுடன் இருப்பவர்களிடமும் கேட்டால் சர்க்கரையை சேர்த்துக் கொள்வதில்லை என்றே கூறுவார்கள். இனிப்புப் பதார்த்தங்களை எத்தனை தூரம் விரும்புகிறீர்களோ, அத்தனை தூரம் நோய்களையும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறீர்கள் என்று பொருள். இனிப்பையே வேண்டாம் என தள்ளி வைக்க வேண்டாம் என்று பொருளில்லை. எப்போதும் குறைவாக பயன்படுத்துதல் நல்லது

ஏனென்றால் பொதுவாக அனைவரும் காஃபியிலோ, பாலிலோ நாளுக்கு நாள் சர்க்கரையின் அளவை ஏற்றிக் கொண்டே போகிறார்களே தவிர குறைப்பது இல்லை./ நீங்கள் அப்படி இருக்கிறீர்களென்றால் விரைவில் மாற வேண்டும்.

சர்க்கரையினால் பெருமளவு வியாதிகள் உருவாகின்றன. சாதாரண நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றால் எதவித கேடும் வராது. ஆனால் நீங்கள் சேர்க்கும் வெள்ளைச் சர்க்கரையால் கேடுகள் உருவாகும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் கெடுதல் சேர்ப்பவை.

அதுவும் கடைகளில் நீங்கள் வாங்கும் சில வகை உணவுகளில் மிக அதிகமாக ரசாயனம் கலக்கப்பட்ட சர்க்கரை இருக்கின்றது. அவற்றால் நமது உடலுக்கு பாதகமே உண்டாகிறது. அத்தகைய உணவுகளைப் பற்றி இங்கு காண்போம்.

ரெடிமேட் காலை உணவுகள் :

காலையில் அவசரகதியில் சாப்பிடுவதற்கு பெரும்பாலோனோர் சாக்கோஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், போன்ற இனிப்பு நிறைந்த ரெடிமேட் தானிய வகைகளை சாப்பிடுகிறார்கள். இவை ஆரோக்கியமானவை எனவும் நினைத்து தினபப்டி அவர்களில் காலை டயட்டில் இந்த வகை தானியங்களை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த உணவுகளில் மிக அதிக சர்க்கரை உள்ளது

வாசனையூட்டப்பட்ட க்ரீன் டீ மற்றும் காஃபி :

இப்போது சாக்லெட் ஃப்ளேவர் அல்லது வெனிலா ஃப்ளேவர் என காஃபி மற்றும் க்ரீன் டீ வகைகள் வந்துவிட்டது. ஆனால் இந்த வகை பானங்களில் மிக அதிகமாக சர்க்கரை இருக்கின்றது.அதிலுள்ள செய்ற்கை இனிப்பு மற்றும் சர்க்கரை இருக்கின்றது. இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

நிறம் மற்றும் வாசனையூட்டப்பட்ட யோகார்ட் :

யோகார்ட் நல்லது என அடிக்கடி எல்லாரும் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அது நல்லதுதான் ஆனால் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி என நிறம் மற்றும் சுவையூட்டப்பட்ட யோகார்ட் அதிக இனிப்புகள் சேர்க்கப்பட்டவை. அவற்றை சாப்பிட்டால் உடலுக்கு தீமையே தவிர நன்மைகள் தராது.

சுகர் ஃப்ரீ பொருட்கள் :

சுகர் ஃப்ரீ பிஸ்கட், சுகர் ஃப்ரீ உணவுகள், இனிப்புகள் என பலவகையில் இனிப்பை வேறு விதமாக சேர்க்கத் தொடங்கி விட்டனர். இவை உங்கள் மெட்டபாலிசத்தை பாதிக்கும். மேலும் உடல் பருமனை அதிகரிக்க்ச் செய்பவை. ஆகவே அவற்றையும் தவிருங்கள்.

குக்கிஸ் பிஸ்கட்ஸ் :

குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதற்காக குக்கிஸ் எனப்படும் இனிப்பு வகை உணவுகளை வாங்கி தருகிறோம். ஆனால் அவை மோசமான விளைவையே தருகிறது.இவற்றில் சேர்க்கும் ப்ரிசர்வேட்டிவ் மற்றும் செயற்கை இனிப்புகள் நாளடைவில் மோசமான பாதிப்பை அளிக்கின்றது.

ரெடிமேட் சூப் :

சமைக்கும் நேரம் குறைவு என ரெடிமிக்ஸ் சூப் பொடிகளை வாங்கி நிமிடத்தில் சூப் தயார் செய்து அசத்துவோம். ஆனால் அதிலுள்ள மிக மோசமான ரசாயனம் கலந்த செய்ற்கை பொருட்கள் உங்கள் உடலில் நீண்ட காலம் தங்கி கேடு விளைவிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள பழங்கள்

பழங்களை உலரச் செய்து அவற்றை இனிப்பு ஜீராவில் மூழ்க வைத்து அதனை உலர்ந்த வடிவத்தில் தருகிறார்கள்.(Canned Fruits). அவை நல்லதல்ல. உங்கள் கலோரியை அதிகரிகச் செய்பவை.

டோனட் மற்றும் கேக் வகைகள் :

இது உங்களுக்கு தெரிந்ததாக இருந்தாலும் ஆசை யாரை விட்டது என சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அதுவும் விதவிதமான நிறங்களில் வானவில், ரெட் வெல்வெட் என பலவித நிறங்களில் மயக்கக் கூடிய கேக்குகள் மற்றும் டோனட்டுகள் என்றைக்காவது சாப்பிடலாம்தான். ஆனால் அதற்கு அடிமையாகி தினமும் சாப்பிடுதல் விரைவில் சர்க்கரை வியாதியை உண்டாக்கிவிடும்.

ஐஸ் டீ

இன்று மிகவும் பிரபலமாகி வரும் ஐஸ் டீ உண்மையில் குடிப்பது நல்லதல்ல. அவற்றின் சுவை அமோகமாக இருந்தாலும் அதில் அதிகப்படியான கலோரி மற்றும் இனிப்புகள் இருக்கின்றன.

சாஸ் :

சாஸ் மற்றும் கெட்ச் அப் போன்றவைகளும் இனிப்புத் தன்மை கொண்டவை. கடைகளில் விற்கும் பாஸ்தா சாஸ், தக்காளி மற்றும் வெள்ளை சாஸ் போன்றவை உடலுக்கு கேடுகள் தருவிபபவை.

பிரட்

பிரட் நல்லது என தவறான ஒரு முத்திரை அதற்கு வழங்கி அதனையும் வாரம் தவறாமல் சாப்பிடிபவர்கள் நிறைய பேர். இனிப்பு பிரட் எல்லாவற்றிலும் மைதா மற்றும் அதிகபப்டியான கலோரி இருக்கின்றது. சர்க்கரையில்லாத முழுதானிய பிரட்டை சாப்பிடுங்கள்.

விட்டமின் நீர் :

இப்போது பாட்டில்களில் விட்டமின் நீர் என விற்கப்படுகிறது. அதிலுள்ள மினரல்களையெல்லாம் அழித்து சுத்தகரிக்கப்பட்டு தரப்படுகிறது. இதனை குடிக்கும்போது இன்னும் குடிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும். ஆனால் இந்த நீரில் 32கிராம் சர்க்கரை மற்றும் 120 கலோரி இருக்கிறதாம்.

பிபிக்யூ சாஸ் :

பிபிக்யூ சாஸ் இறைச்சி மற்றும் காய்கறிகளுக்கு சுவை வழங்குவதற்காக சேர்க்கப்படுகிறது. 2 ஸ்பூன் பிபிக்யூ சாஸில் 16 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.

ஓட்ஸ் பார்

பேக்கரிகளில் விற்கும் ஓட்ஸ் மற்றும் நட்ஸ் பார்கள் பார்க்க ஹெல்தி என நினைத்தாலும் அவை உண்மையில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டது. 100 கிராம் பாரில் 6 ஸ்பூன் சர்க்கரை இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சுகோங்க! வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பவரா? அலட்சியம் வேண்டாம்!

nathan

பல்வேறு நோய்களை எளிதாக தீர்த்து வைக்கும் வெண்டைக்காய்

nathan

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan

உடல் எடையை அதிகரித்து, தோற்றத்தை மேம்படுத்த சில எளிய உணவுகள்!

nathan

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு ஜப்பான் நாட்டினர் கடைபிடிக்கிற பழக்கங்கள் என்னவென்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

nathan