25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 sugarcane 13
எடை குறைய

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் கரும்பை சாப்பிடலாமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனை அதிகமாக இருக்கும். இந்த பண்டிகையினால் ஒரு மாதம் வரை எங்கு பார்த்தாலும் கரும்பு எளிதில் கிடைக்கும். ஆனால் தற்போது பலருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் இருப்பதால், எந்த ஒரு உணவைப் பார்த்தாலும் அது உடலுக்கு நல்லதா கெட்டதா என ஆராய்ந்து பின்பே பலரும் சாப்பிடுகிறார்கள்.

குறிப்பாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் தான், பார்த்து பார்த்து உணவை தேர்ந்தெடுத்து உண்பார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையினால் அதிகம் விற்கப்படும் கரும்பை சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போருக்கு எழும். ஏனெனில் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், எங்கு கரும்பை சாப்பிட்டால், இதுவரை எடையைக் குறைக்க மேற்கொண்ட டயட் வீணாகிவிடுமோ என்ற அச்சம் தான்.

ஆனால் அப்படி அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் கரும்பில் எடையைக் குறைக்க உதவும் பண்புகள் ஏராளமாக உள்ளது. அதோடு கரும்பு இதர நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இக்கட்டுரையில் கரும்பு ஜூஸ் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது குறித்தும், கரும்பை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

சத்துக்கள்

கரும்பில் 20 சதவீதத்திற்கு குறைவாகவே இயற்கை சர்க்கரை உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், ஜிங்க், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்றவைகளும் அடங்கியுள்ளது.

நார்ச்சத்து

கரும்பில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இதனை அன்றாடம் குடித்து வருவதன் மூலம், எடையைக் குறைக்கத் தேவையான டயட்டரி நார்ச்சத்துக்கள் போதுமான அளவில் உடலுக்கு கிடைக்கும்.

இந்த நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் செய்து, உணவை அதிகம் உண்பதைத் தடுத்து, உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் குறைக்கும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

சிலரது உடலினுள் அழற்சி அதிகம் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க முடியாமல் இருப்பர். அத்தகையவர்கள், கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன் தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸைக் குடித்து வருவதன் மூலம், உடலினுள் உள்ள அழற்சியைத் தடுக்கலாம். உடலினுள் இருக்கும் அழற்சி குறைந்தால், எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

ஆற்றல் அதிகரிக்கும்

கரும்பு ஜூஸில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இதனால் உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கும். குறிப்பாக உடற்பயிற்சியின் போது எனர்ஜி பானங்களைக் குடிப்பதற்கு பதிலாக, கரும்பு ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது ஸ்டாமினாவை தக்கவைக்க உதவும்.

அல்கலைன்

கரும்பு ஜூஸ் ஒரு அல்கலைன். அதாவது இது உடலில் உள்ள அமிலங்களை நடுநிலைப்படுத்தும். உடலில் அமிலங்கள் நடுநிலையில் இருந்தால், எடையைக் குறைக்கும் செயல்முறை வேகமாக்கப்படும்.

மேலும் உடல் வறட்சியின்றி நீர்ச்சத்துடனும் இருக்கும். ஆகவே டயட் பானங்கள் எதையும் வாங்கி குடிக்காமல், கரும்பு ஜூஸைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

இப்போது கரும்பு சாப்பிடுவதாலோ அல்லது அதன் ஜூஸைக் குடிப்பதாலோ கிடைக்கும் இதர நன்மைகள் குறித்து காண்போம்.

நச்சுக்கள் நீங்கும்

கரும்பு ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற்றப்படும். உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டாலே, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை தானாக குறைய ஆரம்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

கரும்பு ஜூஸில் கிளைசுமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இது இரத்த சர்க்கரை அளவை நிலையாகத் தான் வைத்திருக்க உதவும். கரும்பு ஜூஸில் 13 சதவீதம் தான் சர்க்கரை உள்ளது.

எஞ்சியதில் அத்தியாவசிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் தான் உள்ளது. எடையைக் குறைக்க வேண்டுமானால், முதலில் இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருந்தால், அது சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்கள் வருவதைத் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் கரும்பை ஆசைக்கு சாப்பிடுவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அளவு மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.

கொலஸ்ட்ரால்

கரும்பு ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தும். உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், இதயம் ஆரோக்கியமாகவும், இரத்த ஓட்டம் சீராகவும், உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திப்பவர்கள், கரும்பு ஜூஸ் வடிவில் எடுப்பதற்கு பதிலாக, அதை அப்படியே கடித்து சாப்பிடுவது நல்லது. இதனால் கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், பற்களின் எனாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஊட்டச்சத்து குறைபாட்டினால் தான் வாய் துர்நாற்றம் வருகிறது. எனவே கரும்பு சாப்பிடுவதன் மூலம் இப்பிரச்சனை தீரும்.

எலும்புகள்

குழந்தைக்கு கரும்பு ஜூஸை தினமும் கொடுத்து வந்தால், அது அவர்களின் பல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். ஏனெனில் கரும்பில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. இதன் விளைவாக குழந்தைகளின் எலும்புகள் வலிமையாகி, நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள்.

கல்லீரல் பிரச்சனைகள்

கரும்பு ஜூஸ் உடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரலின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். கரும்பு உடலில் க்ளுக்கோஸ் அளவை சீராக பராமரிப்பதால், கல்லீரல் கடுமையாக வேலை செய்வதைத் தடுத்து, அதனை பாதிப்பில் இருந்து தடுக்கும்.

செரிமான பிரச்சனை

அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவரா? அப்படியானால் கரும்பு ஜூஸை தினமும் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம், வயிற்றில் உள்ள pH அளவை நடுநிலையாக்கி, செரிமான அமிலத்தின் சீரான உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும்

புற்றுநோய்

கரும்பு ஜூஸ் புற்றுநோய்களான புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். ஆய்வுகளிலும் கரும்பில் உள்ள ப்ளேவோனாய்டுகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நகங்களின் ஆரோக்கியம்
உங்கள் நகங்கள் அசிங்கமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகிறதா? அப்படியானால் கரும்பை சாப்பிடுங்கள். ஊட்டச்சத்து குறைபாட்டினால் தான் நகங்கள் ஆரோக்கியமற்றதாக காணப்படுகிறது. ஒருவர் கரும்பு ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம், நகங்கள் ஊட்டச்சத்து பெற்று, ஆரோக்கியமானதாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.

அசிடிட்டி
கரும்பு ஜூஸ் இயற்கையாகவே அல்கலைன் என்பதால், அசிடிட்டி பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், கரும்பு ஜூஸைக் குடித்து வருவதன் மூலம், அமிலத்தின் அடர்த்தி குறைந்து, நடுநிலையாக்கப்பட்டு, அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுதலை அளிக்கும்.

Related posts

ஒரு டீ குடித்தால் போதும், உடல் எடை சரசரவென குறையும்!….

sangika

உங்களுக்கு தெரியுமா இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.

nathan

உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்

nathan

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

nathan

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

பழங்கள்-காய்கறி சாப்பிட்டால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்

nathan

நலம் பயக்கும் நனி சைவம்! (வீகன் டயட்)

nathan

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!

nathan

உடல் எடை குறைக்க இந்த கொடியிடை அழகிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

nathan