எடை குறைய

உடல் எடை குறைக்க விசித்திரமான டயட்டுகள் – முடிஞ்சா முயற்சி பண்ணுங்க!

உடல் எடையை கட்டுக்கோப்பாக கொண்டுவர ஒவ்வொருவரும் பிரயத்தனம் படுகிறார்கள். டயட் என்ற வார்த்தையை எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டதோ இன்று நம்மிடம் படாத பாடுகிறது. யாரைக்கேட்டாலுமே எதோ ஒரு பெயரைச் சொல்லி டயட் என்கிறார்கள். இப்படி உலகைச் சுற்றி கடைபிடிக்கப்படும் விசித்திரமான டயட் வகைகளைப் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு.

மேக்ரோபயோட்டிக் டயட் : காய்கறி,பழங்கள் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு தானிய வகைகளை மட்டுமே சாப்பிடும் டயட் இது. அமெரிக்காவைச் சேர்ந்த மிச்ஹியோ குஷி முதன் முதலாக இதனை அறிமுகப்படுத்தினார்.

முட்டைகோஸ் சூப் டயட் : மருத்துவர்களால் தடை செய்யப்பட்ட டயட் இது. உடல் எடையை குறைக்க குறிப்பிட்ட நாட்களுக்கு வெறும் முட்டைகோஸ் சூப் மட்டுமே குடிப்பார்களாம். இதில் வேறு சத்துக்கள் கிடைக்காது, சரிவிகித டயட் இல்லை என்பதால் பெரும்பாலானோர் இதனை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஷங்க்ரி லா டயட் : உணவுப் பிரியர்களுக்கான டயட் இது. நீங்கள் விரும்பியதை இதில் உண்ணலாம். அடிப்படை விதி ஒன்றே ஒன்று தான். அது நீங்கள் உங்களுக்கான செட் பாயிண்ட் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை மையப்படுத்தியே உங்களது டயட் இருக்க வேண்டும். இது மனரீதியாக உங்களை தயார்ப்படுத்தும்.

ப்ளெட்செரைசிங் : இதில் சாப்பிடும் உணவுப்பொருளை வாயில் வைத்து நன்றாக மென்று கடித்து சாப்பிடலாம் ஆனால் முழுங்க கூடாது. வெளியில் துப்பிட வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது இது. இதனை அறிமுகப்படுத்திய பிளச்சடு கோடிஸ்வரர் ஆகிவிட்டார்.

ப்ரீத்தாரியனிசம் : இவ்வகை டயட் இருப்பவர்கள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். காரணம், இவர்கள் உணவு பெருமளவு குறைத்து விடுவார்கள் அவர்களுக்கென எனர்ஜி முழுவதும் மூச்சுக்காற்று வழியாக பெறுவதாக நம்புகிறவர்கள்.

ஸ்லீப்பிங் டயட் : விழித்திருந்தால் தானே பசிக்கும் அப்போது தானே சாப்பிட வேண்டும் என்று யோசித்த அறிவாளியின் மூளையில் உதித்த ஐடியா தான் இது. இதற்காக நிறைய மெனக்கடல்கள் எல்லாம் தேவையில்லை. நீண்ட நேரம் தூங்குவது தான் டயட் ரூல்ஸ். ஆனால் இது அரோக்கியமானது அல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ரா ஃபுட் டயட் : கிடைக்கும் பொருட்களை சமைக்காமல் அப்படியே உண்பது. பெரும்பாலும் இவர்கள் பெரும்பாலும் சைவ உணவுகளை சாப்பிடவே பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

10 1499688053 7

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button