Herbal juice
எடை குறைய

வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!தெரிந்துகொள்வோமா?

இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலரும் துரித உணவுகள், ஜங்க் உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாடி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகளைப் பற்றி பலரும் பேசி வருவதால், அதனை உணர்ந்து கொண்ட நம்மில் சிலர், அதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை நாடி செல்கின்றனர். இயற்கையான உணவுகளை மீறி ஆரோக்கியமானது எதுவாக இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒன்று தான் ஜூஸ்.

ஸ்மூத்தி தான் தற்போதைய நாகரீக பானமாக மாறியுள்ளது. அதனுடன் சேர்த்து ஜூஸும் சேர்ந்துள்ளது. ஸ்மூத்தியைக் காட்டிலும் மிக லேசான பானமாகும் இது. அதேப்போல் இதில் பல்வேறு பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கப்பட்டுள்ள இந்த பானத்தை குடித்தால் கிடைக்கும் புத்துணர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதனை குடித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஜூஸுக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. ஒவ்வொன்றையும் தயாரிக்கும் முறையும் மாறுபடும். அதனால் அனைத்தையும் முயற்சி செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்கள்.

புதிதாக தொடங்குபவர்களுக்கான பச்சை சாறுகள்

பச்சை சாறுகள் தயாரிப்பதையும், அதனை குடிப்பதையும் எங்கு தொடங்குவது எப்படி தொடங்குவது என்ற தடை உங்கள் மனதில் இருந்தால், இங்கே தொடங்குங்கள். எளிமையான ஒன்றாக தேர்ந்தெடுக்கலாம். அதற்கு ருசி அளித்திட அதனுடன் சில பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதேப்போல் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ள பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அன்னாசிப்பழம், ஆப்பிள் மற்றும் இஞ்சி ஆகியவைகளும் இதில் அடக்கம். பரட்டைக்கீரை மற்றும் ப்ராக்கோலி ஆகியவற்றை தன்னுடன் கலந்தால் தனித்துவமான பச்சை நிறம் கிடைக்கும்.

உடல் மெலிவதற்கான பச்சை ஜூஸ்

பச்சை சாறு உதவியுடன் மெலிந்து, இடை நிலை அளவை அடைய வழி உள்ளது. அதற்கு பரீட்சயமான பொருட்களான பரட்டைக்கீரை, வெள்ளரிக்காய் மற்றும் செலரியை பயன்படுத்தலாம். ஆனால இனிப்பை பெறுவதற்கு திராட்சையை பயன்படுத்தலாம். பொதுவாக சாறுகளுக்கு இனிப்பை சேர்த்திட ஆப்பிள் சேர்க்கப்படும். ஆனால் திராட்சையும் கூட திறம்பட செயல்படும். அதனுடன் சேர்த்து ஊட்டச்சத்துக்களையும் இது அளிக்கிறது.

ஆப்பிள் சோம்பு ஜூஸ்

சுவைமிக்க ருசியைப் பெற இந்த பச்சை நிற ஜூஸ் சுவைமிக்க இரண்டு உணவுகளை பயன்படுத்துகிறது. ஒன்று பழம், மற்றொன்று காய்கறி. ஆப்பிள் என்பது இயற்கை இனிப்பை அளிக்கும். சோம்பு விதைகள் தனித்துவமான சுவைமணத்தைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆப்பிளுடன் நன்றாக ஒன்றி போய்விடும்.

சுவைமிக்க பச்சை நிற ஜூஸ்

பச்சையான ஜூஸை குடிக்கும் போது, அதன் சுவை நன்றாக இல்லையென்றால், கண்டிப்பாக அதனை தொடர்ச்சியாக நீங்கள் குடிக்க போவதில்லை. இதனால் கண்டிப்பாக நீங்கள் பல மாற்றங்களை காண்பீர்கள். இந்த பச்சை சாற்றில் முழு எலுமிச்சை ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் இதில் சிட்ரஸ் தன்மைக்குரிய புளிப்பு அதில் இருக்கும். மொத்தமாக மூன்று ஆப்பிள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான இனிப்பை சற்று குறைக்க இது உதவும். இதில் அதிகப்படியான பரட்டைக்கீரை இருப்பதால் போதிய வைட்டமின்களும் கனிமங்களும் கிடைக்கும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் அடங்கும்.

ப்ரைமாவெரா (பாஸ்தா வகை) பச்சை சாறு

ப்ரைமாவெரா சமையலறையால் தயாரிக்கப்பட்டதே இந்த பச்சை சாறு. மற்ற பச்சை சாறுகளில் சேர்க்கப்பட்டுள்ளதை போல், இந்த பச்சை சாற்றிலும் வெள்ளரிக்காய், செலரி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

அன்னாசிப்பழம் பச்சை சாறு

ஊட்டச்சத்து நிறைந்துள்ள அன்னாசிப்பழத்தின் சுவை மணம் பச்சை சாற்றில் தூக்கலாக இருக்கும். இதனுடன் கூடுதலாக சில பழங்களும், காய்கறிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். ஒரு கப் அன்னாசிப்பழத்துடன் பச்சை பூக்கோசு, பரட்டை கீரை மற்றும் ஆப்பிளும் சேர்த்துக் கொள்ளப்படும். இதனுடன் ஒரு கப் கீரையை சேர்த்துக் கொண்டால், வைட்டமின் ஏ மற்றும் சி-யும் வளமையாக கிடைக்கும். கடைசியாக நற்பதமான புதினாவை ஒரு கை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் குளிர்ச்சியாகவும் மிருதுவாகவும் இருக்கும். மன அழுத்தம் நிறைந்த நாளுக்கு பின் இந்த ஜூஸை குடித்தால், அதிலிருந்து சுலபத்தில் மீண்டு வரலாம். ஏன், வேலைப்பளு அதிகமாக இருந்தால் நடுவே கூட இதனை குடிக்கலாம்.

சுத்தம் செய்து, நச்சுத்தன்மையை நீக்க உதவும் பச்சை சாறு

நச்சுத்தன்மையால் ஏற்படும் தாக்கங்களை போக்க பச்சை சாறு பெரிதும் உதவிடும். மேலும் உடலை சுத்தம் செய்யவும் இது முக்கியமாக உதவும். இந்த சாறு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதனை சுத்தமாக வைத்திருக்க ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துங்கள். இதனால் ஜி.எம்.ஓ., பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை தவிர்க்கலாம். ஆப்பிள், பரட்டை கீரை, செலரி மற்றும் வெள்ளரிக்காய் சேர்க்கப்படுவதால் சுவைமிக்கதாக இருக்கும். இதனுடன் விசேஷ பொருளாக துளசியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக கிடைக்கும் பச்சை சாறுகளில் இது சேர்க்கப்பட மாட்டாது. துளசி சுவையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியத்தை அளிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள்.

பச்சை கீரை லெமனேட்

லெமனேட் மற்றும் கீரையை பொதுவாக ஒன்றாக பார்க்க முடியாது. அது தான் இந்த பச்சை சாற்றின் சிறப்பம்சமே. கீரையின் சுவை அதிகமாக பிடிக்காதவர்களுக்கு இந்த ஜூஸ் கண்டிப்பாக பிடிக்கும். அதற்கு காரணம் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள லெமனேட். இது சுவையை மேம்படுத்த உதவும். உண்மையான எலுமிச்சை தான் லெமனேட்டிற்கு சுவையை அதிகரிக்கும். செயற்கை லெமனேட் என்றால் அதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை.

பச்சை சாறு II

முதல் முறை பயன்படுத்திய முறையையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றில்லையே. சுவையை மேம்படுத்த புதிதான முயற்சியில் இறங்கலாம் தானே. பச்சை சாற்றின் சுவையை அதிகரிக்க இது அடுத்த கட்டமாகும். சிவப்பு திராட்சை பழம், இந்த பச்சை சாற்றில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த சாறு சற்று புளிப்பாக இருக்கும். அதனுடன் இனிப்பும் சேர்ந்திருக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள அன்னாசிப்பழம்.

ஆரோக்கியமாக இருக்க பச்சை சாறு

இந்த ஜூஸ் குடித்து பழக்கமாகி விட்டதென்றால், ஆரோக்கியமான உடல்நலத்தை பராமரித்திட இந்த ஜூஸை அடிக்கடி குடியுங்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்கள் உங்கள் உடலுக்கு எப்படி பயனை தரும் என்பதை விளக்குவதே இந்த ஜூஸின் சிறப்பம்சம். பரட்டை கீரை நார்ச்சத்தை அளிப்பதால், வயிற்றில் உள்ள கொழுப்பை இது குறைக்கும். அதே போல் இஞ்சி செரிமானத்திற்கு உதவிடும். எலுமிச்சை வைட்டமின் சி அளிக்கும். கீரை வைட்டமின் ஈ அளிக்கும்.

Herbal juice

Related posts

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​ #GoodHealth

nathan

உடல் எடையை குறைக்க இதை குடிங்க!….

sangika

இதை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்தபின் உங்கள் தொப்பையைக் கொஞ்சம் குனிந்து பாருங்கள்

sangika

வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!

nathan

உங்க எடையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க! முயன்று பாருங்கள்

nathan

டயட்

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan

அழகை பதிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி

nathan

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

nathan