29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
poatmeal honey
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒல்லியாக விடாமல் தடுக்கும் உணவுகள்!!!

ஸ்லிம்மான உடலமைப்பு வேண்டும் என்று நினைத்து தினமும் 3-4 மணிநேரம் உடற்பயிற்சி செய்தும் பலனில்லாமல போகின்றதா? நீங்கள் செய்யும் உடற்பயிற்சியில் ஏதேனும் கோளாறு இருக்கும் என்று நினைக்கிறீர்களா அல்லது சாப்பிடும் உணவில் ஏதேனும் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஏனெனில், நீங்கள் சாப்பிடும் உணவு, உங்களுடைய ஸ்லிம்-டவுன் முயற்சியை முழுமையாக டவுன் செய்துவிடும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. மேலும் இந்த உணவுகள் உங்களுடைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலை ஒல்லியாக வைத்திருக்க முனைவதை தடுக்கவும் செய்கின்றன.

குறைவான கொழுப்பு, குறைவான சுவை கொண்ட மாற்று உணவுகளை ‘ஆரோக்கியமான உணவு’ என்ற பெயரில் சாப்பிட்டாலும், அவையும் கூட உங்களுடைய ஆரோக்கியத்திற்கு உலை வைத்து விடுகின்றன. ‘அதிகமான நார்ச்சத்து’ மற்றும் ‘இயற்கையானது’ போன்ற லேபிள் வசனங்கள் உங்களை ஏமாற்றும் வேலையை முதலில் செய்கின்றன.

உண்மையில், ‘ஆரோக்கியமான உணவு’ என்று சொல்லப்படும் உணவுகளில் பலவும் அதிகமான கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்புகளைக் கொண்டுள்ளன. உணவில் கலந்துள்ள பொருட்களின் பட்டியல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான உண்மைகளைப் படித்தறிவது உதவியாக இருக்கும். இதோ உடலுக்கு மிகவும் நல்லது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியல்!

தேன்

சர்க்கரையை விட மிகவும் சுகாதாரமானது மற்றும் இயற்கையானது தேன் என்று நினைக்கிறீர்களா? இரண்டிலுமே அதிகளவிலான குளுக்கோஸ் உள்ளது. தேன் மிகவும் அடர்த்தியாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் இருப்பதை விட அதிகமான கலோரிகள் தேனில் இருக்கும். எடையைக் குறைப்பதற்காக பிற இனிப்பு வகைகள் சாப்பிடுவதை விட்டு விட்டு, தேன் மட்டும் சாப்பிட்டு வந்தாலும், உங்களுடைய எடையை சொல்லிக் கொள்ளும் படியாக குறைத்திட முடியாது.

குறைவான கொழுப்பு சாலட் டிரெஸ்ஸிங்

குறைவான கொழுப்பு உள்ள பொருட்களைக் கொண்டு டிரெஸ்ஸிங் செய்வதால், சாலட்டில் உள்ள நல்ல குணங்கள் காணாமல் போய் விடுவதாக, அமெரிக்காவிலுள்ள லோவா மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆலிவ் எண்ணெய் அல்லது சிறிதளவு வெண்ணெய், செறிவூட்டப்பட்ட வைட்டமின் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலமாக, காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை வெகுவாக கிரகித்துக் கொள்ள முடியும் என்றும் சொல்லலாம்.

காலை சிற்றுண்டி தானியங்கள்

காலை சிற்றுண்டிக்கு தானியங்களை சாப்பிடுபவர்கள் மற்றவர்களை விட ஸ்லிம்மாக ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவர்கள் தரமான தானியங்களை வாங்கிட வேண்டும் என்று சொல்கிறது ஒரு ஆய்வு முடிவு. எனவே, லேபிளை எப்பொழுதும் பாருங்கள். கவனித்து வாங்கினால், தானியங்களை ஒரே அடியாக பரணுக்கு அனுப்பிடத் தேவையில்லை.

வெண்ணெய் எடுக்கப்பட்ட பால்

வெண்ணெய் எடுக்கப்படாத பால் சுகாதாரமற்றது என்று அண்மைக் காலங்களில் சொல்லப்பட்டு வந்தாலும், வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலும் கூட இதற்குத் துணை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முழுமையான பாலில் 100 மில்லி அளவிற்கு 4 சதவீதம் கொழுப்பு இருக்கும். ஆனால் அதிக கொழுப்புகள் பிரிவில் இந்த அளவு 20 சதவீதமாக உள்ளது. வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலில் 0.1 சதவீதம் கொழுப்பு உள்ளது. எனவே, முழுமையான பாலில் இருந்து, வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலுக்கு மாறுவதால், எந்தவித பெரிய மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை.

ஊட்டச்சத்து குறைவான பாலான வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலிலிருந்து வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை நீக்கப்பட்டு விடுகின்றன. முழுமையான கொழுப்புள்ள பாலை குடிப்பதன் மூலமாக, உடலமைப்பு சுறுசுறுப்பாக இயக்கம் பெற்று, அதிகமான கலோரிகளை கரைத்து விடுவதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பச்சைக் காய்கறிகள்

சமைக்கும் போது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அழிந்து விடுகின்றன என்று சொல்லப்பட்டு வரும் வேளையில், அது தவறு என்று சொல்கிறது ஒரு ஆய்வு. சமைக்கும் போது வைட்டமின் சி-யில் சிறிதளவு அழிந்தாலும், இந்த செயல்பாட்டின் போது நோயை எதிர்த்து நிற்கும் ஆக்சிஜன் எதிர்பொருட்கள் ஊட்டம் பெறுகின்றன. கேரட், கீரை, காளான், தண்ணீர் விட்டான் கொடி, முட்டைக்கோஸ் மற்றும் மிளகு ஆகியவற்றை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதிகமான ஆக்சிஜன் எதிர்பொருட்களைப் பெற முடியும் என்று சொல்கிறது 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு. ஏனெனில், சமைக்கும் போது காய்கறிகளின் தடிமனான செல் சுவர்கள் உடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக நமது உடல் அந்த காய்கறிகளில் கலந்துள்ள ஊட்டச்சத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்கிறது. மெதுவாக கொதிக்க வைப்பதை விட, நீராவியில் வேக வைப்பது மிகவும் நல்லது. அதே நேரம், வறுத்தெடுப்பதன் மூலம் குறைவான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

எடை இழப்பு பானங்கள்

கலோரிகளைக் குறைக்கும் நோக்கில் மென்-பானங்களை விரும்பு குடிப்பவர்கள் இந்த எடை இழப்பு பானங்களை அதிகம் குடிக்கின்றனர். ஆனால், இந்த பானங்கள் எடையைக் குறைக்கும் முயற்சிகளை வீணடித்து விடுகின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த பானங்களில் கலக்கப்படும் செயற்கை சர்க்கரை பொருட்கள், நாக்கின் சுவை மொட்டுக்களை சரி செய்து விட்டாலும், மூளையை இவற்றால் எளிதில் சமாளித்து விட முடியாது. உடலுக்குத் தேவையான கலோரிகளை இவை தடுக்கும் போது, கலோரிக்கான தேடலை உடல் தானாக செய்யத் துவங்கிவிடும். இதன் காரணமாக உங்களுக்கு அதிகமான பசியும், அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும். இதன் காரணமாகத் தான் எடை இழப்பு பானங்களைக் குடிக்கும் நபர்களில் பெரும்பாலானவர்கள், எடையை இழப்பதற்குப் பதிலாக, அதிகமான எடையை பெற்று திணறுகிறார்கள்.

Related posts

சளி, இருமல் தொல்லைக்கு கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan

சுவையான ஆரோக்கியமான துளசி டீ

nathan

சுவையான வேர்க்கடலை பக்கோடா

nathan

சுவையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

கேரட் உருளைக்கிழங்கு சூப்

nathan

ஜாக்கிரதை…உயிரை பறிக்கும் விஷமாக மாறும் கருவாடு! யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்?

nathan

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரைக்கு போக்கும் அற்புத பழம் !

nathan

பெண்களே மசாலா மீன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்கள்…

nathan