32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
02 139900477
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தொடையில் தங்கியுள்ள கொழுப்பை குறைப்பதற்கான சில டிப்ஸ்…

பெரும்பாலானோருக்கு நல்ல அழகான தொடை பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் இதன் மீது அதிக நாட்டம் இருக்கும். அப்படி இருந்தால் தானே, அவர்களால் குட்டையான ஆடைகளை அணிய முடியும். மேலும் வயிற்று கொழுப்பிற்கு அடுத்தபடியாக தொடையில் உள்ள கொழுப்பை கரைப்பது தான் மிகவும் கடினமானது. ஆகவே தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமானால், ஒருசில டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தொடையில் உள்ள கொழுப்பை கரைக்கும் படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஒரே உடற்பயிற்சியை மட்டும் செய்து கொண்டிருக்கக் கூடாது. மாறாக வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் தான், தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைக்க முடியும்.

இங்கு அப்படி தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உணவில் என்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைக்கலாம்.

வாக்கிங்

தினமும் காலையில் எழுந்து வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், தொடையில் உள்ள கொழுப்புக்களை எளிதில் கரைக்கலாம். மேலும் அலுவலகம் அருகில் இருந்தால், அப்போது ஆட்டோ, கேப் போன்றவற்றை பிடித்து செல்லாமல், நடந்து சென்றால், தொடை சிக்கென்று இருப்பதுடன், கால்களும் வலுவுடன் இருக்கும்.

படிக்கட்டுக்களை பயன்படுத்தவும்

எப்போதும் லிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, படிக்கட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமும் தொடையில் உள்ள கொழுப்புக்களை குறைய ஆரம்பிக்கும்.

சைக்கிள் ஓட்டுங்கள்

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் சைக்கிள் தான். ஆனால் தற்போது கால் வலிக்காமல் இருப்பதற்கு பைக் விலை குறைவிலேயே கிடைக்க ஆரம்பித்தவிட்டது. இதனால் சைக்கிள் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொடைகளில் கொழுப்புக்கள் தங்க ஆரம்பித்துவிட்டது. எனவே பைக்கை அதிகம் பயன்படுத்தாமல், அவ்வப்போது சைக்கிளையும் பயன்படுத்துங்கள்.

மாமிசங்களை தவிர்க்கவும்

பெரும்பாலும் தொடையில் இருப்பது செல்லுலைட் தான். இத்தகைய செல்லுலைட் மாமிசங்களில் அதிகம் உள்ளது. குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கிறது. எனவே தொடையை குறைக்க நினைக்கும் போது, மாட்டிறைச்சியை முற்றிலும் தவிர்த்து, மற்ற மாமிச கொழுப்புக்களை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருங்கள்.

ரன்னிங்

தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சிகளில் ஒன்று தான் ரன்னிங். இத்தகைய ரன்னிங்கை ட்ரெட்மில்லில் மேற்கொள்வதை விட, வெளியே காற்றோட்டமாக சுத்தமான காற்றினை சுவாசித்தவாறே மேற்கொள்வது சிறந்தது.

யோகாசனம்

யோகாசனத்தில் தொடையை குறைப்பதற்கு என்று ஒருசில யோகாசனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் படத்தில் காட்டப்பட்ட யோகாசனம். மேலும் சூரிய நமஸ்காரம் கூட தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

முக்கியமாக ஜங்க் உணவுகள் எடுத்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், தொடையில் மட்டுமின்றி, உடல் முழுவதுமே கொழுப்புக்கள் அதிகரித்துவிடும்.

ஸ்கிப்பிங்

சிறுவயதில் விளையாடிய ஸ்கிப்பிங் கூட தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு உதவி புரியும்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடித்தால், உண்ணும் உணவில் அளவு குறைந்து கொழுப்புக்கள் அதிகரிப்பது குறைவதுடன், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களும் குறையும்.

கார்போஹைட்ரேட்டை குறைக்கவும்

எப்போது உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை குறைக்க நினைத்தாலும், அப்போது எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் அளவை கவனித்து குறைக்க வேண்டும்.

சல்சா டான்ஸ்

நடனத்தில் ஆர்வம் இருந்தால், சல்சா டான்ஸ் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் சல்சாவில் கால்களை அதிகம் பயன்படுத்த வேண்டி இருப்பதால், தொடையில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும்.

சரியான ஷூக்களை அணியவும்

முக்கியமாக ரன்னிங், வாக்கிங் போன்றவற்றை மேற்கொள்ளும் போது, கால்களுக்கு சரியான ஷூக்களை அணிய வேண்டும். மேலும் ஹீல்ஸ் இல்லாத ஷூக்களை பயன்படுத்த வேண்டும்.

Related posts

பெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பருவம்

nathan

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சர்க்கரை நோயாளிகள் புண் விரைவில் ஆற வேண்டுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்க உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

nathan

மன அழுத்தத்தின் மூலம் உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?

nathan

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன

nathan

எது நல்ல கொழுப்பு? அதை எவ்வாறு அதிகரிப்பது?

nathan

உங்களுக்கு தெரியுமா மருந்துகள் போன்று வேலை செய்யும் 10 சமையலறை பொருட்கள்!!!

nathan

உங்கள் காதலன் உங்களை திருமணம் செய்துகொள்ளாமல் கலட்டிவிடப்போகிறார் என்பதற்கான அறிகுறிகள்

nathan