37.3 C
Chennai
Monday, Jul 13, 2026
மருத்துவ குறிப்பு

உங்க உடலில் வைட்டமின் சி குறைவதால் என்ன நேரும் தெரியுமா?

வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது.
உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும்.

வைட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும்.

எனவே, வைட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று வைட்டமின் சி. உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

தேவையானப் பொருட்கள்:
ஆரஞ்சு ஜூஸ் – 1/2 டம்ளர்
கிவி ஜூஸ் – 1/2 டம்ளர்
மிளகுப் பொடி – 1/2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
கொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமாக வைத்துககொள்ள உதவும். மிளகுத தூள் உடலில் வைட்டமின் சி யை ஈர்த்துக்கொள்ள உதவக்கூடியது.

Related posts

மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .

nathan

குரலில் மாற்றமா? கவனம் தேவை

nathan

உங்க உடலுக்கு வலிமை தரும் மசாஜ் தெரபி தெரியுமா

nathan

கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் இரத்த கசிவு

nathan

மாரடைப்பு அச்சம்… ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி இருக்கும் அறிகுறிகள்?

nathan

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்

nathan

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

nathan

சூப்பரா பலன் தரும்!! கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் இதோ!

nathan

இதோ மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்! இத படிங்க!

nathan