ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!

உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் அந்த உணவுகள் சில நேரங்களில் தீமையை கூட விளைவிக்கும். அதிலும் உயிர் போகும் அளவிலான தீமையை விளைவிக்கும். எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை நச்சுத்தன்மை நிறைந்திருக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இப்போது அனைவரும் ஆரோக்கியம் என்று நினைத்திருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த உணவுப் பொருட்கள் எவையென்று பார்ப்போமா!!!

உருளைக்கிழங்கு

பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

தக்காளி

மற்றொரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் தக்காளி. இதிலும் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது. அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். ஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்திவிடும்.

ருபார்ப்

இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.

ஆப்பிள்

என்ன அதிர்ச்சியாக உள்ளதா? தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

செர்ரி

பெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த பழங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் தான் விஷம் உள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.

பாதாம்

பாதாம் ஆபத்தான உணவுப் பொருள் என்று சொன்னால், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்று பலர் கேட்கலாம். ஆனால் உண்மையில் கசப்பாக இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம். ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் பல்வேறு பிரச்சனைகளை போக்க வல்லது. ஆனால் அந்த விளக்கெண்ணெய் தயாரிக்கும் ஆமணக்கு விதையை சாப்பிட்டால், உயிரைத் தான் விட வேண்டும். ஏனெனில் அதன் விதையில் ரிசின் என்னும் ஆபத்தான விஷம் உள்ளது. அதிலும் இதன் ஒரு விதை மனிதரையும், நான்கு விதை குதிரையையும் கொல்லும் திறன் கொண்டது. ஆகவே விளக்கெண்ணெயை தயாரிக்க உதவும் ஆமணக்கு விதையில் இருந்து விலகி இருங்கள்.

எல்டர்பெர்ரி (Elderberry)

எல்டர்பெர்ரி பழங்களானது உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழமாகும். ஆனால் இந்த எல்டர்பெர்ரி மரத்தின் வேரில் அதிகப்படியான விஷம் நிறைந்துள்ளது. அதிலும் இந்த விஷம் உடலில் சென்றால் வயிற்றில் பெரும் பிரச்சனையை உண்டு பண்ணி, உயிருக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

பஃப்பர் மீன் (Puffer Fish)

மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படின்னா பஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

காளான்

காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், உயிரை விட நேரிடும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button