30.5 C
Chennai
Saturday, May 11, 2024
ஆரோக்கியம் குறிப்புகள்

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்

1427949708infriarity
நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசிக்க தொடங்குங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

7. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

– மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

Related posts

உஷார்… உங்களுக்கும் இப்படி நடக்கலாம்.! நாட்டு கோழி முட்டையை நம்பாதிங்க..!

nathan

சூப்பர் டிப்ஸ்.. பிரயாணத்தின் போது வாந்தியை நிறுத்த !!!

nathan

பீட்ரூட்டை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

nathan

இந்த தினசரி பழக்கவழக்கங்கள் உங்கள் மனவலிமையை பெருமளவில் அதிகரிக்கும்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஏன் குழந்தை பிறக்கும்போதே அதிக முடியுடன் பிறக்கிறது தெரியுமா?

nathan

புற்றுநோயின் பொதுவான அறிகுறி

nathan

உறவுகளை வலுப்படுத்தும் கருத்துப் பரிமாற்றம்

nathan

செய்வினை மற்றும் திருஷ்டி கழிக்க ஏன் எலுமிச்சை பயன்படுத்துகிறார்கள்?

nathan

வீட்டில் ஈ தொல்லை அதிகமாக இருக்கின்றதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan