ஆரோக்கியம் குறிப்புகள்

உஷார்… உங்களுக்கும் இப்படி நடக்கலாம்.! நாட்டு கோழி முட்டையை நம்பாதிங்க..!

விளையும் பொருள் இயற்கையாக விளைந்தாலும், செயற்கையாக விளைந்தாலும் அதில் கலப்படம் செய்வது மட்டும் மாறவில்லை.

கலப்படம் செய்த பொருட்களை வாங்குவதால் பணத்திற்கும் கேடு, உண்பதால் உடம்பிற்கும் கேடு.

இப்படி உணவுப்பொருட்களில் நடக்கும் கலப்படங்களைக் கண்டறிய, உணவியல் நிபுணர்களும் வேதியியல் நிபுணர்களும் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப்பொருட்களில் இருக்கும் கலப்படங்களை நாமே சோதித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இதன்மூலம் நாம் உண்ணும் உணவுப்பொருட்கள் தரமானவையா என்பதைக் கண்டறியவும், தரமற்ற உணவுப்பொருள்களை வாங்குவதையும் தவிர்க்கவும் முடியும்.

நாட்டு கோழி முட்டை :

கோழி முட்டை இட்டவுடன் நம் கையில் எடுக்கும் முட்டை மட்டுமே அசல் நாட்டு கோழி முட்டை. அடுத்தவர் கையில் இருந்து வாங்கும் முட்டைகள் கண்டிப்பாக நாட்டு கோழி முட்டை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் நாட்டு கோழி முட்டையிலும் கலப்படம் வந்துவிட்டது.

நாட்டுக் கோழி முட்டைக்கு எப்பொழுதுமே, நல்ல வரவேற்பு உள்ளது. இதைத் தெரிந்து கொண்டு தான், பிராய்லர் கோழி முட்டையை, தேயிலைத் தண்ணீரில் நனைத்து, பழுப்பு நிறமாக்கி, நாட்டுக் கோழி முட்டைன்னு விற்பனை செய்வதும் நடந்து கொண்டு உள்ளது.

வாங்கி வந்த முட்டையை, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். நாட்டு கோழி முட்டையாக இருந்தால் எதுவும் ஆகாது. கலப்பட முட்டையாக இருந்தால் டீ சாயம் வெளுத்து விடும்.

எந்த பொருளை வாங்கினாலும் நன்கு ஆராய்ந்து வாங்குவது தான் நமக்கும், நம் உடல் நலத்திற்கும் நல்லது.

Related posts

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் உண்டாகும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு இதுவே அருமருந்து!

nathan

ஆண்களே! இடுப்பைச் சுற்றி டயர் வந்துடுச்சா? டயட் திட்டங்கள்….

nathan

பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி!

nathan

பெண்களே காலையில் டென்ஷன் இல்லாமல் வேலையை தொடர வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதிக்கலாமா? |

nathan

பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

செட்டிநாடு வெள்ளை குருமா

nathan

கவணம்! பூப்பு அடைதலை முன்கூட்டியே தூண்டும் நகப்பூச்சு!

nathan

தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான அல்ல அமெரிக்க இதய சங்கம் எச்சரிக்கை

nathan