30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
2 159
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா நாம கொடுக்கிற முத்தத்திற்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

அன்பை வெளிப்படுத்தும் செயலாக உலகம் முழுவதும் கருதப்படும் ஒரு விஷயம் முத்தமாகும். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான பெட்டி எவரெட் தனது பாடலில் ” உங்கள் காதலர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அவரது முத்தத்தை கவனியுங்கள் ” என்று கூறினார். முத்தமிடுவது நம்மில் பெரும்பாலோருக்கு இயல்பான பாசத்தின் வெளிப்பாடாகத் தோன்றுகிறது.

பாசத்தை வெளிப்படுத்த பல வழிகள் இருந்தாலும் முத்தத்தை விட சிறந்த வழி வேறேதுவுமில்லாமல் இருக்க காரணம் நம்முடைய ஹார்மோன் செயல்பாடுகள்தான். அன்பை வெளிப்படுத்த முத்தத்தை எப்படி முதன் முதலாக தேர்ந்தெடுத்தார்கள் என்பது இன்றும் புரியாத மர்மமாக உள்ளது. அதுமட்டுமின்றி முத்தத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல மர்மங்கள் உள்ளது. இந்த பதிவில் முத்தத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

முதல் முத்தம் வலிமையான நினைவாகும்

பட்லர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவாக கூறியது அவர்களின் முதல் முத்தத்தைத்தான். தங்களின் முதல் பாலியல் அனுபவத்தைக் காட்டிலும் பெரும்பாலான மக்கள் தங்களின் முதல் முத்தத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

ஏன் முத்தமிடுகிறார்கள்?

ஒருவரை ஏன் முத்தமிடுகிறார்கள் என்பது இன்றும் சரியாக பதில் தெரியாத கேள்வியாக உள்ளது. மிகவும் பிரபலமான கோட்பாடு, முத்தம் என்பது மக்கள் தங்கள் கூட்டாளர்களைப் பற்றிய உயிரியல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு வழியாக உள்ளது. உமிழ்நீரில் டி.என்.ஏ இருப்பதால் இது சாத்தியமானதாக நம்பப்படுகிறது.

இது உயிரை காக்கும்

1980 களில், ஒரு ஆய்வு, வேலைக்குச் செல்வதற்கு முன்பு தங்கள் மனைவிகளை முத்தமிடும் ஆண்கள் குறைவான கார் விபத்துக்களில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கண்டறிந்தது. தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறியது.

 

எல்லோரும் அதைச் செய்வதில்லை

ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள சில கலாச்சாரங்கள் மேற்கத்தியர்கள் அறிமுகப்படுத்தும் வரை முத்தம் கொடுப்பதில் ஈடுபடவில்லை. பிற கலாச்சாரங்களில், பொதுவில் முத்தமிடுவது வெறுக்கத்தக்கது மற்றும் சட்டவிரோதமானது. இன்றும் இந்தியாவில் பொது இடங்களில் முத்தமிடுபவர்களை விநோதமாகத்தான் பார்க்கிறார்கள்.

பிலேமபோபியா

முத்தமிடுவது அனைவரும் விரும்பும் ஒன்றாக இருந்தாலும் அதற்கு பயப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முதல் முத்தம் பெரும்பாலும் பதட்டத்தை உருவாக்குவதாக இருக்கும், ஆனால் சிலருக்கு, முத்தமிடுவது மிகவும் பயத்தை ஏற்படுத்தும், இது ஒரு உண்மையான பயத்தை உருவாக்குகிறது. இந்த போபியா இருப்பவர்கள் முத்தமிட எப்பொழுதும் பயப்படுவார்கள்.

ஆரோக்கியத்திற்கு நல்லது

சமீபத்திய ஆண்டுகளில், பல ஆய்வுகள் முத்தம் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கண்டறிந்துள்ளது. வாய் பாக்டீரியாவை பரிமாறிக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் ஒரு முத்தத்தின் போது நாம் உருவாக்கும் கூடுதல் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் இதயத்துடிப்பை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

 

தலையை வலது பக்கம் திருப்புவது

முத்தத்தின் போது, பெரும்பாலான மக்கள் தலையை வலது பக்கம் திருப்புவதாக ஆய்வுகள் கூறுகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மூன்று பேரில் இருவர் முத்தமிடும்போது தலையை வலது பக்கம் சாய்த்துக் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களின் அனிச்சை செயல்களில் ஒன்றாகும்.

உலகின் மிக நீண்ட முத்தம்

உலகின் மிக நீண்ட முத்தத்திற்கான சாதனை படைத்தவர்கள் லக்சனா மற்றும் எக்கச்சாய் டிரனாரத் ஃபோ தாய்லாந்து ஜோடியாவர். 2013 ஆம் ஆண்டில், இந்த காதல் பறவைகள் 58 மணி நேரம், 35 நிமிடங்கள் மற்றும் 58 வினாடிகள் தொடர்ந்து முத்தமிட்டனர்.

சிறந்த உடற்பயிற்சி

ஒரு நிமிடம் முத்தமிடுவதால் 26 கலோரிகள் கரையும். காரணம், நீங்கள் முத்தமிடும்போது, 34 முக தசைகள் மற்றும் 112 தோரணை தசைகள் உட்பட 146 தசைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.

இருட்டிலும் முத்தமிடலாம்

பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூளையின் பிரீமோட்டர் கார்டெக்ஸில் சிறப்பு நியூரான்கள் இருப்பதைக் கண்டறிந்தனர், அவை இரண்டு சிறப்புகளைக் கொண்டுள்ளன: தொட்டுணரக்கூடிய உணர்வு மற்றும் முகத்தின் காட்சி விழிப்புணர்வு. இந்த நியூரான்களுக்கு, ஒருவருக்கொருவர் உதடுகளை எவ்வளவு இருளிலும் காணலாம். இதனால்தான் இருட்டிலும் நம்மால் சரியாக முத்தமிட முடிகிறது.

முத்தம் போதைப்பொருளை போன்றது

முத்தம் ஏன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று நீங்கள் ஆர்வமாக இருக்கலாம், ஏனென்றால் நீங்கள் முத்தமிடும்போது, உங்கள் மூளை டோபமைனை வெளியிடுகிறது. போதைப்பொருள் எடுத்துக்கொள்ளும்போது வெளியிடப்படும் வேதிப்பொருளும் இதுதான்.

 

மனஅழுத்த நிவாரணி

முத்தம் உங்கள் இரத்தத்தில் உள்ள கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்க உதவுகிறது. கார்டிசோலின் குறைந்த அளவு பாதுகாப்பு உணர்வுக்கு பங்களிக்கிறது.

Related posts

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள் – தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

முயன்று பாருங்கள் நரம்புச்சுருட்டலுக்கு மிகச்சிறந்த நிவாரணி

nathan

மாதவிடாய் நாட்களில் பெண்கள் அனுபவிக்கிற வலி சாதாரணமானதுதானா?

nathan

தெரிந்துகொள்வோமா? பெண்களின் வயதும்.. குழந்தை பாக்கியமும்…

nathan

இதில் நீங்க எப்படி தூங்குவீங்கன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு விஷயத்தை சொல்றோம்..

nathan

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன…

nathan

கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

வைத்திய குறிப்புகள்…!! ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள

nathan