625.500.560.350.160.300.053.800. 9
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

ரத்த குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுக்கும் ஆரஞ்சு, இதய பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

கிட்னியில் கல் உருவாகும் பிரச்னையை தடுக்கும். இதில் உள்ள சிட்ரிக் ஆசிட் கிட்னியினை பாதுகாக்கும்.

ஜீரண உறுப்புகளில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் ஆரஞ்சு முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்பட்ட நச்சுகளையும் வெளியேற்றிவிடும்.

நச்சுகள் வெளியேறுவதன் மூலம் முகம் பளபளக்கும். முகத்தில் உள்ள சருமத்தை ஆரஞ்சு பாதுகாக்கும்.

அமெரிக்க கேன்சர் ஆராய்ச்சி நிறுவனம் ஆரஞ்சு பழம் கேன்சருக்கு எதிரான போராடும் தன்மை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.

625.500.560.350.160.300.053.800. 9

உடல் எடையை குறைக்க உதவும் ஆரஞ்சு கெட்ட கொழுப்புகளை தேங்க விடாது. டயட் இருப்பவர்கள் நிச்சயம் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஜூஸ் செய்து குடிப்பதை விட அப்படியே இதை சாப்பிடுவது கூடுதல் பலன்களை தரும்.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ரத்த கொதிப்பு பிரச்னைக்கு தீர்வு தரும்.

ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இதனால் முடி கொட்டும் பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இதில் உள்ள பொலேட் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றும். மலட்டுத்தன்மை பிரச்னை நீங்கும்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.

ஒட்டுமொத்தமாக உடலுக்கு பல நன்மைகள் தரும் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு பலன் பெறுங்கள்.

Related posts

டயட்டில் இருப்போருக்கான… ஓட்ஸ் உப்புமா

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி தொந்தரவுக்கு தீர்வு தரும் பூண்டு மஞ்சள் பால்

nathan

லெமன் டீ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

nathan

கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ!

nathan

ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி செய்வது எப்படி?

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா?

nathan

இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொத்தமல்லி

nathan

முயன்று பாருங்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan