27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053 1
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… நீங்கள் பிறந்தகிழமை இதுவா ?? அப்போ உங்க பிறவி குணம் இது தான் !!

ஒரு மனிதனின் குணம் என்பது அவரின் வாழ்க்கைக்கு முகவும் இன்றியமையாத ஒன்றாகும்.அவரின் குணநலன்களை பொறுத்தே அவருக்கு இன்ப துன்பங்கள் அமையும்.

அப்படி ஒருவரின் குனநலன்களை அவர்களின் ஜாதகம் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.அதுபோல, ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி ஜோதிடம் மூலம் அறிய பிறந்த திகதி பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது.

ஒருவரது பிறந்த கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

கிழமைகளும் பலன்களும் :
ஞாயிற்றுக்கிழமை :
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

திங்கட்கிழமை :
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் அனைவரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.

செவ்வாய்கிழமை :
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள்.

தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.

புதன்கிழமை :
புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர்.

நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.

வியாழக்கிழமை :
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்.

அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.

வெள்ளிக்கிழமை :
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

சனிக்கிழமை :
சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள்.

பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்

Related posts

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு குறைபாடுகளை போக்குவதில் உதவும் ஆசனங்கள்!!

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?

nathan

கருப்பை வலுப்பெற தினமும் உணவில் சேர்க்க

nathan

உடல் அரிப்பு நீங்க மருந்து

nathan

குழந்தைகளுக்கு வெல்லம் கொடுக்கலாமா?… எவ்வளவு கொடுக்கலாம்?…தெரிஞ்சிக்கங்க…

nathan

வீடே மணக்கும் கருவாட்டு குழம்பு….

nathan

பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறை

nathan

மறக்க முடியாத வில்லி..அடேங்கப்பா! தேவி பிரியா நிஜத்துல சாந்தமானவங்களாம்!

nathan

இதை முயற்சி செய்து பாருங்கள்! இரவில் சரியான தூக்கம் வரலையா? நிம்மதியா தூக்கம் வரும்!

nathan