28.5 C
Chennai
Sunday, May 18, 2025
அழகு குறிப்புகள்

இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

29-1430309798-1-sleeptips2
அழகாக இருக்க வேண்டுமெனில் மேக்கப் போட்டால் மட்டும் போதாது. சருமத்திற்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இரவில் படுக்கும் போது ஒருசில செயல்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால் தான் அழகை பராமரிப்பதோடு, அதிகரிக்கவும் முடியும்.

இங்கு அழகை அதிகரிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இரவில் படுக்கும் போது தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இன்றிலிருந்து பின்பற்றி வாருங்கள்.

அழுக்குகளை நீக்குங்கள்
இரவில் படுக்கும் போது, முகத்திற்கு போட்டுள்ள மேக்கப்பை கட்டாயம் நீக்க வேண்டும். மேலும் நாள் முழுவதும் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலில் இருந்ததால், தவறாமல் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

கலோரி குறைவான உணவுகள்
காலையில் எழுந்த பின் உங்கள் சருமம் மென்மையாக இல்லையா? அப்படியெனில் இரவில் படுக்கும் போது கலோரி குறைவான டயட் அல்லது சாலட் மற்றும் ஜூஸ் போன்றவற்றை எடுத்து வாருங்கள். இதனால் பஞ்சு போன்ற சருமத்தைப் பெறலாம்.

கூந்தல்
உடலிலேயே முடியில் தான் அழுக்குகள் அதிகம் இருக்கும். ஏனெனில் மாசடைந்த சுற்றுச்சூழலில் சருமத்திற்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பது கூந்தல் தான். எனவே அத்தகைய கூந்தலை இரவில் படுக்கும் போது விரித்துக் கொண்டு படுக்காமல் கட்டிக் கொண்டு உறங்குங்கள். மேலும் முடியில் எண்ணெய் அதிகம் இருப்பதால், அவை முகத்தில் படுமானால், பருக்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கவனமாக இருங்கள்.

கண்கள்
கண்களுக்கான க்ரீம் தடவ சிறந்த நேரம் இரவு தான். இரவு நேரத்தில் கண்களுக்கான க்ரீமை தடவி மசாஜ் செய்து உறங்கினால், காலையில் எழுந்த பின் கண்கள் பொலிவோடு அழகாக காணப்படும்.

கைகள் மற்றும் கால்கள்
இரவில் படுக்கும் போது கை மற்றும் கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் தடவிக் கொண்டு படுத்தால், மறுநாள் காலையில் கை மற்றும் கால்கள் வறட்சியின்றி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்

Related posts

beauty secrets from grandma – பாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள்

nathan

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்!!

nathan

ஆரஞ்சுப் பழ சருமப் பராமரிப்பிற்கு

nathan

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan

கசிந்த தகவல் ! இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்..

nathan

ஆண்ட்டியான சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடிய விஜே பிரியங்கா!!

nathan

தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

கவரும் கைகள் வேண்டுமா?

nathan